பிரபல நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் தமிழகத்தில் 100 கோடியை தாண்டிய நிலையில், கடந்த வாரம் மேலும் 5 கோடி வசூலித்து இதுவரை 105. 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால் இந்தப்படத்திற்கு முந்தைய நாள் வெளியான பீஸ்ட் திரைப்படம் வெளியான அன்றைய நாள் மிகப் பெரிய அளவிலான ஓப்பனிங்கை பெற்றாலும்,அதன்பின்னர் வெளியான எதிர்மறையான விமர்சனங்கள் படத்தின் வசூலை குறைத்து விட்டது.


 






இதுவரை பீஸ்ட் திரைப்படம் 120 கோடி வசூலித்துள்ளதாக பிங்க் வில்லா இணையதளம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்த வசூல் பீஸ்ட் திரைப்படத்தை  தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் 7 ஆவது இடத்தை பிடிக்க வைத்திருக்கிறது. கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அந்தப்பட்டியலில் 9 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. 


வசூல் விவரபட்டியல்


பாகுபலி 2 - 146  கோடி
மாஸ்டர்- 141.80 கோடி
பிகில் - 140. 80 கோடி
சர்கார் -131 கோடி 
விசுவாசம் - 128  கோடி 
மெர்சல் - 126 கோடி 
பீஸ்ட் -120 கோடி (27 days)
2.0 - 113 கோடி
கே.ஜி.எஃப் 2 105.70 கோடி (26days)
பேட்ட -104 கோடி






 


வசூல் சாதனை


யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் பாகம் 2.  இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று, வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. வெளியான அன்றைய நாளே 130 கோடிக்கு மேல் வசூலித்த கே.ஜி.எப் 2 திரைப்படம் அண்மையில் 1000 கோடியை கடந்தது. முன்னதாக பாகுபலி பாகம் 1 வசூலித்த மொத்த வசூலை படம் வெளியான 7 நாட்களில் கே.ஜி.எப் 2 திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. அதனைத்தொடர்ந்து இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் வசுலித்த தொகையை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.  


19 வயது எடிட்டர் 


இந்தப்படத்தில் யஷ்ஷூக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புவுனா கெளடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.