பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டாவது முறையாக கடந்த திங்கள் கிழமை அதாவது செப்டம்பர் மாதம் 19ம் தேதி உரையாற்றியுள்ளார். அவர் தனது உரையில் மிகவும் கவனிக்கத்தக்க பிரச்சினை குறித்து பேசியுள்ளார். இதனால் அனைவரது பாராட்டையும் அவர் பெற்று வருகிறார்.  அவர் தனது உரையில், காலநிலை மாற்றத்தினால் உலகம் அழிவதில் இருந்து பாதுகாக்க உலகத் தலைவர்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டது பெரும் கவனத்தினைப் பெற்றுள்ளது.

  


இந்த நிகழ்வில் பேசிய பிரியங்கா, "கோவிட்-19 இன் பேரழிவு விளைவுகளிலிருந்தும், காலநிலை மாற்றங்களில் இருந்தும் உலக நாடுகள்  தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்த விசயத்தில் உலகளாவிய ஒற்றுமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த காலகட்டம் உலகின் முக்கியமன காலகட்டமாக பார்க்கப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடி, நாடுகளுக்கு இடையே மோதல்கள், இயற்கையின் சீற்றங்கள்  என மனித வாழ்க்கையைப் பாதிக்கிறது.





இவை மட்டும் இல்லாமல் வேலையின்மை, வறுமை, அதன் காரணமாக இடம்பெயர்வு, பசி மற்றும் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றாலும் நமது உலகம் மிகவும் மோசமான சூழலுக்கு சென்று கொண்டு இருக்கிறது.  ஆனால், இந்த நெருக்கடிகள் ஏதோ தற்செயலாக நடந்துவிடவில்லை. இவற்றை சரி செய்ய மிகவும் முக்கியமான மற்றும் சாத்தியமான திட்டம் ஐ.நாவிடம் உள்ளது என பேசியுள்ளார். மேலும், நமது உலகை காக்க உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும்  இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்டது குறித்து பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், பிரியங்கா சோப்ரா, செயல்பாட்டாளர்கள் மலாலா யூசப்சாய், அமண்டா கோர்மன் மற்றும் பலருடன் அந்த நிகழ்வில் கலந்து கொண்டதையும் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளர்.