தான் சமூக வலைதளங்களில் ஃபோட்டோக்களை பகிர்வதன் பின்னணியில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்று பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறியுள்ளார்.


ஆலியா மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த ஓரிரு வருடங்களாகவே இருவரும், தங்களின் உறவு குறித்து மேடைகளிலும் , நேர்காணல்களிலும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் அவர்களின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. திருமணத்தன்று முதல் புகைப்படத்தை ஆலியா பட் தான் பகிர்ந்தார்.


அவர் அதில், இன்று எனது குடும்பத்தினர், நண்பர்கள் சூழ வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதோ எங்களின் ஃபேவரைட் ஸ்பாட்டில் அதான் இந்த பால்கனியில் நாங்கள் தம்பதியாக நிற்கிறோம். இங்குதான் நாங்கள் கடந்த 5 ஆண்டுகளாக எங்களின் உறவை வளர்த்தோம் என்று பதிவிட்டிருந்தார்.


அதன்பின்னரும் பல தருணங்களில் ஆலியா தன் கணவர் ரன்பீருடன் எடுத்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.  அவர் பகிரும் புகைப்படம் வைரலான நிலையில் அதில் சிலர் வேண்டத்தகாத விமர்சனங்களையும் முன்வைத்தனர்.


அதற்கு ஆலியா பட் தனது பதிலடியை பதிவு செய்துள்ளார். அண்மையில் அவர் ஃபில்ம்ஃபேர் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், “நான் எனது சமூக ஊடகப் பக்கங்களில் நிறைய புகைப்படஙக்ளைப் பகிர்கிறேன். ஆனால், அதை நான் பகிர்வதற்குப் பின்னால் எனது விருப்பம் மட்டும்தான் உள்ளது. அது அந்த நேரத்து உணர்வின் வெளிப்பாடு. அதற்கு விளக்கம் ஏதும் தேவையில்லை. அதை சிலர் நான் ஃபாலோவர்ஸ் ஈர்க்க செய்கிறேன் என நினைத்தால் அதற்கு நான் ஏதும் செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார். 




ஆலியாவின் வெற்றிப் பாதை:
பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1 திரைப்படம் தான் ஆலியா நாயகியாக அறிமுகமான முதல் பெண். அதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திற்குப் பின்னர் அவர் கல்லி பாய், டியர் ஜிந்தகி ஆகிய படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். அண்மையில் ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடியது. ஆர்ஆர்ஆர் படத்திலும் ஆலியா நடித்திருந்தார். ஆனால் அதில் அவரை தனித்துப் பாராட்டும்படி கதாபாத்திரம் அமையவில்லை. இந்த நிலையில் தான், ஆலியா பட் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமானார். ‘The Heart Of Stone' தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற படத்தில் ஆலியா பட் கால் காடோட் உடன் நடிக்கிறார். படப்பிடிப்பு லண்டனில் நடந்து வரும் நிலையில், அது குறித்து புகைப்படங்களை ஆலியா அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.


அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட்டில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடியுடன் அமிதாப்பச்சன், நாகர்ஜூனா என பிரபல நட்சத்திரங்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் க்ளிம்பிஸ் வீடியோ அண்மையில் வெளியானது. டீஸர் ஜூலையிலும், படம் செப்டம்பரில் வெளியாகிறது.