பாலிவுட் பிரபல நடிகர் (Ranveer Singh) வெளியிட்ட நிர்வாண புகைப்படம் குறித்த சர்ச்சைகள் எழுந்தது குறித்த கேள்வி நடிகை ஆலியா பட் ரன்வீருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான ரன்வீர் சிங் தன் நடிப்பு தாண்டி, ஆஃப் ஸ்க்ரீனில் வெளிப்படுத்தும் எனர்ஜியால் நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தையே தன் பக்கம் வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக 1972ஆம் ஆண்டு அமெரிக்காவின் காஸ்மோபோலிட்டன் இதழுக்கு ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் (Burt Reynolds) கொடுத்த புகழ்பெற்ற நிர்வாண ஃபோட்டோஷூட்டை நினைவுகூறும் வகையில் ரன்வீர் சிங் நிர்வாண ஃபோட்டோஷூட்டை நடத்தியிருந்தார்.
இந்நிலையில், ரன்வீர் சிங்கின் துணிச்சலான இந்த முயற்சியை ரன்வீர் சிங்கின் ரசிகர்கள் ஒருபுறம் சமூக வலைதளங்களில் பாராட்டித் தள்ளி வருகின்றனர். மற்றொரு புறம் குறும்பான நெட்டிசன்கள் மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ்பெற்ற ’க்ரியேஷன் ஆஃப் ஆடம்’ உள்ளிட்ட பெய்ண்டிங்குகளில் ரன்வீரை பொருத்தி ட்ரெண்ட் செய்து வருகின்றன. இதற்கு அவருக்கு எதிராக கருத்துகள் எழுந்து வந்தது.
இந்நிலையில், பாலிவுட் குயின், ஆலியா பட் நெட்ஃபிளிக்ஸில் (Netflix) வெளியாக இருக்கும் படமான டார்லின்ங்க்ஸின்( Darlings) டிரைலர் வெளியீட்டு விழாவில் ரன்வீர் சிங் நிர்வாண ஃபோட்டோஷூட் குறித்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார்.
இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ரன்வீர் சிங்கிற்கு அன்பை மட்டுமே வழங்குவோம். என் இனிய நண்பர் ரன்வீர் சிங் பற்றி யார் நெகட்டிவான கருத்துகள் சொன்னாலும் அதை நான் ஏற்கமாட்டேன்; ஏற்க முடியாது. அவரை எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளேன். ரன்வீர் அவரது திரைப்படங்களில் நமக்காக எவ்வளவோ தந்திருக்கிறார். நாம் அவருக்கு அன்பை மட்டுமே கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ரன்வீர் சிங், இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்தபோது, “எனது ஆன்மாவையே வெளிக்கொணர்ந்து நடிப்பவன் நான். உடலை நிர்வாணமாக காட்டும்போது அசெளகரியமாக இல்லை. இது வெளிப்பாட்டு நிலை மட்டுமே” என மனம் திறந்துள்ளார்.