மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் புறநகர் அதிமுக சார்பில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி, வீட்டுவரி உள்ளிட்ட கட்டண உயர்வை கண்டித்து, தமிழக முழுவதும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் மின்சார கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி ஆகிய கட்டணஉயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குவிந்ததால் காவல்துறை பாதுகாப்பு அதிகளவில் போடப்பட்டிருந்தது.

Continues below advertisement

இதில் கண்டன உரையாற்றிய சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக அரசு தமிழகத்திற்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கியது. ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மின்வெட்டு மட்டுமே அதிகப்படியாக உள்ளது. அதிலும் சிறு குறு தொழில் செய்பவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் விதமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைகின்றனர் என்றார். மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம், அம்மா உணவகம் போன்ற மக்களுக்கு பயன்பெறக்கூடிய திட்டங்களை நிறுத்தி உள்ளது கண்டிப்புக்குரியது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மின்சார கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி கட்டணங்களை உயர்த்தி அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தில் முதல்வரின் தந்தை கலைஞருக்கு மணிமண்டபம் மற்றும் அவர் பயன்படுத்திய பேனாவிற்கு 80 கோடி ரூபாயில் நினைவுத்தூன் கட்டப்படவுள்ளதை கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்த நீட் தேர்வு ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் போன்ற திட்டங்களை செயல்படுத்தாமல் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக மக்களை ஏமாற்றுகிறது என்று கூறினார்.

இதேபோன்று சேலம் புறநகர் அதிமுக சார்பில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை ஏற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை கண்டன உரையாற்றினார். அதில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயச்சங்கரன், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement