Most Disliked Video: உலகத்தின் அதிகமாக வெறுக்கப்பட்ட படத்தின் ட்ரெய்லர் எது தெரியுமா?

யூட்யூபில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ என்னவென்று தெரியுமா? அலியா பட் நடித்த சடக் 2 படத்தின் ட்ரெய்லர்தான் உலகளவில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ.

Continues below advertisement

யூ ட்யூபில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ என்னவென்று தெரியுமா?

Continues below advertisement

லைக் டிஸ்லைக்

யு ட்யூபில் ஒரு வீடியோ நமக்கு பிடித்திருந்தால் அதனை லைக் செய்து ஆதரிப்பது போலவே. பிடிக்காத வீடியோவை டிஸ்லைக் செய்யலாம். ஆனால்  பெரும்பாலான நேரங்களில் ஒரு வீடியோ டிஸ்லைக் செய்யப்படுவதற்கு காரணம் அந்த வீடியோ பிடிக்காததால் மட்டும் இல்லை. இதற்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு அந்த அந்த வீடியோவை  வெளியிட்டவரை பிடிப்பதில்லை. சிலருக்கு சிலருக்கு ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரின் மூக்கு கொஞ்சம் பெரிதாக இருப்பது சகித்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது. கருத்தியல் ரீதியான மோதல்கள் காரணாமாக சிலர் ஒரு வீடியோவை டிஸ்லைக் செய்யலாம். திட்டமிட்டு ஒரு வீடியோவை மொத்தமாக டிஸ்லைக் செய்வது என ஏராளமான சிக்கல்கள் இதில் இருக்கின்றன.

யூ ட்யூப் கொண்டுவந்த மாற்றம்

அதிகப்படியான டிஸ்லைக்கள் ஒரு வீடியோவின் பார்வை எண்ணிக்கையைக் குறைப்பதால் மற்றும் யுடியூபர்களை இது ஊக்கமிழக்கச் செய்வதாலும் கடந்த 2021 ஆம் ஆண்உ யூடியுபில் டிஸ்லைக் எண்ணிக்கையை மறைத்து வைக்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வழிமுறை அறிமுகப்படுத்துவதற்கு முன்வரை யூடியூபில் அதிக டிஸ்லைக்குகள் பெற்ற வீடியோக்கள் என ஒரு தனி பட்டியல் இருந்தது. இந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்தது ஒரு இந்திய குறிப்பாக பாலிவுட் படத்தின் ட்ரெய்லர் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அதுவும் பாலிவுட்டில் மிக புகழ்பெற்ற நடிகையான அலியா பட் அவர்களின் படம் என்றால்.

சுஷாந்த் சிங் ராஜ்புட்

கடந்த 2020-ஆம் ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களின் திடீர் மரணம் பாலிவுட் திரையுலகைல் பல்வேறு விவாதங்களைத் தொடங்கிவிட்டது. நெப்போட்டிசம் என்கிற வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலானது. பாலிவுட்  சினிமாவில் நடிகர்கள் தங்களது திறமையின் அடிப்படையில் இல்லாமல் குடும்ப பின்னணியை வைத்து தேர்வு செய்யப்படுகிறார்கள் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும்  நடிகர்கள் பலர் விமர்சனத்திற்கு ஆளானார்கள்.

சடக் 2  படத்தின் ட்ரெய்லர்

இத்தகைய சமயத்தில் ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது. ஆலியா பட் மற்றும் சஞ்ஜய் தத் ஆகியவர்கள் நடித்த சடக் (சாலை) படத்தின் இரண்டாம் பாகம். 1991 ஆம் வெளிவந்த முதல் பாகத்தின் தொடர்ச்சி இந்தப் படம் . பாலிவுட் திரைப்பட இயக்குனர் மஹேஷ் பட் 25 ஆண்டுகளுக்குப்பின் இயக்குநராக கம்பேக் கொடுக்கும் திரைப்படம் இது. இந்தப் படத்தில் அவரது இரண்டு மகள்களான பூஜா பட் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் நடித்திருந்தார்கள் . இவர்களுடன் மற்றொரு பிரபலத்தின் மகனான சஞ்ஜய் பட் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரின் சகோதரரான ஆதித்யா ராய் கபூர் ஆகியவர்களும் நடித்திருந்தார்கள். சுஷாந்த் சிங் ராஜ்புட் இன் மரணத்தைத் தொடர்ந்து பெரும் விவாதம் நடந்துகொண்டிருந்த சூழலில் முழுவதுமே பிரபலங்களின் வம்சாவழிகள் நடித்த ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பயங்கரமாக சீண்டிவிட்டது. இதன் காரணத்தினால் அனைவரும் அந்த வீடியோவை டிஸ்லைக் செய்யத் தொடங்கினார்கள். உலகளவில் முதல் முறையாக 48 மணிநேரத்தில் கிட்டதட்ட 53 லட்சம் பேர் டிஸ்லைக் செய்த ஒரு படத்தின் ட்ரெய்லராக மாறியது சடக் 2 படத்தின் ட்ரெய்லர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola