தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவருடைய வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. திரையரங்களில் வசூல் வேட்டையில் ஈடுபட்டது. அதைத் தொடர்ந்து அஜித் குமாரின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும். இந்தப்படம் அடுத்த வருடத்தின் மத்தியில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தி அறிவிப்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


 


இந்நிலையில் இந்தப் படத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவனின் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு விக்னேஷ் சிவன் 50 லட்சம் ரூபாய் மட்டும் சம்பளமாக கேட்டதாக தெரிகிறது. அதற்கு லைகா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான தகவல் வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.


 






முன்னதாக இந்த படத்திற்கு அஜித்தின் சம்பளமாக(Ajith Salary) லைகா தயாரிப்பு நிறுவனம் 105 கோடி ரூபாய் கொடுக்கப் போவதாக ஒரு புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அஜித் 100 கோடி ரூபாய் கேட்டதாகவும், அதற்கு லைகா நிறுவனம் மேலும் 5 கோடி ரூபாய் சேர்த்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ‘ஏகே 61’ படத்துக்குப் பிறகு, இந்த ஆண்டு இறுதியில் ‘ஏகே 62’ படத்திற்கான ஷெட்யூலைத் தொடங்கவுள்ளார் அஜித். படம் 2023 கோடையில் வெளியாகும் என்றும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் விரைவில் அடுத்தடுத்த மாதங்களில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண