அஜித் தற்போது 'துணிவு' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வருகிற ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது. ஜிப்ரான் இசையமைக்க இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இதனைத்தொடர்ந்து வாரிசு திரைப்படமும் வருகிற ஜனவரி 11 ஆம் தேதி வெளியாவாதால் திரையரங்கத்தின் காட்சிகள் பாதித்துவிடக் கூடாதென்று துணிவு திரைப்படத்திற்கு இரவு 1 மணி காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.



                   


துணிவு ரிலீஸுக்கு பிறகு அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இத்திரைப்படத்தை சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் காமெடியுடன் கூடிய திரில்லர் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, சந்தானம் ஆகியோர் கமிட் ஆகியுள்ளதாக தகவல் நேற்று வெளிவந்தது. அவர்கள் மட்டுமின்றி நடிகர் 'அர்ஜுன் தாஸ்' இத்திரைப்படத்தில் இணையப்போகிறார் எனக் கூறப்படுகிறது.


          
               


 


28 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி:


1994 ஆம் ஆண்டு வெளியான ‘பாசமலர்கள்’ படத்தில் அஜித்தும், அரவிந்த்சாமியும் இணைந்து நடித்தனர்  இந்தப்படத்தை சுரேஷ் சந்திர மேனன் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் இவர்கள் அஜித்தின் 62 ஆவது படத்தில் இணைய இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளதாகவும் திரைப்படம் வருகிற கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.


இத்துடன் கூடுதல் தகவல் என்னவென்றால், வீரம் படத்தில் காமெடியானாக நடித்த சந்தானமும் ஏகே 62 வில் இணையவுள்ளராம். ஆனால், இந்த படத்தில் அவர் நகைச்சுவை கலைஞராக நடிக்கவுள்ளாரா? அல்லது துணை கதாபாத்திரமாக நடிக்கவுள்ளாரா? என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாக வில்லை.


முன்னதாக, இந்தப்படத்தில் நடிப்பதற்கு அஜித் 100 கோடி ரூபாய் கேட்டதாகவும், அதற்கு லைகா நிறுவனம் மேலும் 5 கோடி ரூபாய் சேர்த்து கொடுத்ததாகவும் தகவல் வெளியானது;  இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக சொல்லப்படும் நிலையில், 2023 கோடையில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த விவரங்கள் அடுத்தடுத்த மாதங்களில் அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது