நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வலிமை' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தொடர்ந்து Zee 5 இல் OTT தளத்தில் படம் வெளியானது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச். வினோத்துடன் இணைந்துள்ளார். இதற்கான ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கிவிட்டது. சென்னையின் மவுண்ட் ரோட்டில் செட்டை ஐதராபாத்தில் அமைத்து இந்த ஷூட் தொடங்கி நடந்து வருகிறது. அஜித் ஏற்கெனவே தன்னுடைய பகுதியை நடிக்கத் தொடங்கிவிட்டார். 


இந்நிலையில் படத்தில் மலையாள நாயகி ஒருவர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சு வாரியர், அஜித்தோட ஜோடி சேரவுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது. கதைக்கு மஞ்சு வாரியர் சரியாக பொருந்துவார் என வினோத் விரும்பியதாகவும், ஒரு லைன் கதை பிடித்துப்போனதால் மஞ்சு வாரியரும் நடிக்க ஒகே சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் ஐதராபாத் பறக்கும் மஞ்சு, அஜித் பட ஷூட்டில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 






'AK  61' ஒரு வங்கிக் கொள்ளை திரைப்படம் என்றும், இதில் அஜித் குமார் எதிர்மறையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமானது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக படத்தை மூன்று மாதங்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. 


'ஏகே 61' படம் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து இவர்கள் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். ‘ஏகே 61’ படத்திற்கான அஜித்தின் தோற்றமும் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. தற்போதைய நிலவரப்படி அதிதி ராவ் ஹைதாரி, தபு, யோகி பாபு பிரகாஷ் ராஜ் மற்றும் கவின் ஆகியோர் முக்கிய நடிகர்கள் என்று கூறப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண