தமிழ் சினிமாவின் மாஸ் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் தற்போது AK 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் செல்ல தயாராகிவிட்டார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்குமார். 


 


Ajith returns Chennai tonight :இமயமலை பயணம் முடித்து சென்னை திரும்பும் அஜித்?!  மீண்டும் ஷூட்டிங்குக்காக பாங்காக் பயணம்!


இமயமலைக்கு பைக்கிங் பயணம்:
 
இறுதி கட்ட படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னர் அஜித் இமயமலைக்கு பைக்கில் பயணம் செய்தபோது அவர் அங்கு எடுத்த பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வந்தது. சென்னையில் இருந்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லடாக்கிற்கு விமானம் மூலம் பயணம் செய்து அங்கிருந்து இமயமலைக்கு பைக்கிங் மூலம் பயணம் செய்தது வைரலானது. AK 61 படத்தின் ஹீரோயினான மலையாள பிரபல நடிகை மஞ்சு வாரியார் கூட நடிகர் அஜித்துடன் இமயமலைக்கு பயணம் செய்தார். தனது பயணத்தின் போது ரசிகர்களிடம் பேசிய அஜித் வீடியோ இதோ உங்களுக்காக :   


 






 


சென்னை திரும்பும் தல :


பயணத்தை முடித்து கொண்ட நடிகர் அஜித்குமார் இன்று இரவு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மற்றும் AK 61 படக்குழுவினர் பாங்காக் செல்ல உள்ளதாக ஏற்கனவே வெளியான தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாங்காக்கில் பைக் சேசிங் காட்சியில் படமாக்கப்படவுள்ளது என கூறப்படுகிறது. படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டு சென்னை திரும்பும் AK 61 படக்குழுவினர் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பினை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. 


 






 


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 :


AK 61 படம் மிகவும் பரபரப்பாக பேசப்படுவதால் தல ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள். இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன் தாராவுடன் நடிகர் அஜித் தனது AK 62 படத்தில் நடிப்பார் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் திகைக்க வைத்து வருகிறார் மாஸ் ஹீரோ அஜித்குமார்.