தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக கலக்கி வருபவர் நிழல்கள் ரவி. அவர்  டிக்கிலோனா படத்தில் நடித்து இருந்தார். கேஜிஎப் படம் போல படத்தின் கதை சொல்லும் கதாபாத்திரமாக காட்டிவிட்டு, அவரை மனநிலை சரியில்லாதவர் போல காமெடியாக சித்தரித்து இருப்பார் இயக்குனர். படத்தில் சிறிய ரோல் என்றாலும் அவரது நடிப்புக்கும் குரலுக்கும் பாராட்டு கிடைத்து வருகிறது.


இந்தியா முழுவதும் பட்டிதொட்டி ஹிட் அடித்த கே.ஜி.எஃப் திரைப்படத்தில் கதை சொல்லும் கதாபாத்திரத்திற்கு இவர்தான் டப்பிங் செய்திருப்பார். அதில் அவரது குரலே தமிழ் வெர்ஷனுக்கு ஒரு கிளாசிக் லுக் கொடுத்தது. அப்படி பெரிதும் புகழப்பட்ட பல கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்தும், பல நல்ல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.



இவர் சித்ரா லச்சுமணனின் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்குகொண்டு பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது தற்கால சூப்பர் ஸ்டார்கள் ஆன, விஜய், அஜித், தனுஷ் பற்றி அவர் பகிரும்போது பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை கூறினார். அவர் பேசுகையில், "அஜித்துடன் முதலில் அமராவதி திரைப்படத்தில் நடிக்கிறேன், அவருக்கும் தமிழில் அதுதான் முதல்படம். நான் அசிஸ்டன்ட் ஒருவரிடம் சொல்கிறேன், இந்த பையன் பெரிய ஆளா வருவான் சார்ன்னு சொன்னேன். அவன் கேட்டான், சார் அவருக்கிட்ட என்ன சார் இருக்கு, எத வச்சு சார் சொல்றீங்க பெரிய ஆளா அகிடுவார்ன்னு என்று கேட்கிறார். அதெல்லாம் ஏதோ ஒன்னு இருக்குய்யா, அவன் பெரிய ஆளா வருவான் பாரு என்றேன். பிறகு, ஆசை படம் ஷூட்டிங் டெல்லியில் நடந்தது. நான் நேரடியாக அஜித்திடமே சொல்லுகிறேன், நீ பெரிய இடத்துக்கு போக போறய்யா என்றேன். சார் நிஜமாவா சார்ன்னு கேட்டார். ஆமாம் உன் கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு நல்லா வருவன்னு சொன்னேன். நான் அப்போ சொன்னத இப்போ செஞ்சிட்டு இருக்காரு, நான் சொன்ன மாதிரி இன்னைக்கு அந்த இடத்துல இருக்கார். ஒரு குறிக்கோளை வைத்துவிட்டால் அடைவதற்கு பாடாய் படும் நடிகர்.






என்னைப்போல்தான் யாரையுமே தெரியாமலே சினிமாவுக்கு வந்தவர். நல்ல உழைப்பாளி, அவருடைய சிட்டிசன் படத்தில் எல்லாம் அருமையான நடிப்பை வழங்கி இருப்பார். வில்லன் திரைப்படத்தில் இரு கதாபாத்திரம் செய்திருப்பார், அது எனக்கு அவர் நடிப்பில் மிகவும் பிடித்த படம். விஜயோடு குஷி திரைப்படத்தில் இணைந்து நடித்தேன். அவருக்கு அப்பாவாக நடித்தேன், அவரும் ஒரு சிறந்த நடிகர். அதற்கு முன்னதாகவே சிறு வயதில் என்னுடைய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார். அப்போதெல்லாம் பெரிய பெரிய டயலாக்குகளை அசால்ட்டாக அடிப்பார். நான் ஆச்சர்ய பட்டு போவேன். அது போல அப்போதிலிருந்தே நல்ல திறமை கொண்ட நடிகர் அவர். இப்போது தனுஷ், எப்படி அவருக்குள் அவ்வளவு திறமை உள்ளதென்று தெரியவில்லை. ஒரு அபரிபிதமான நடிகர், அதுவும் வெற்றிமாறனோடு இணைந்து செய்யுற படங்களில் பின்னுகிறார்.