AK 62 Update: எளிமையாக நடந்த அஜித்தின் ஏகே 62 படத்தின் பூஜை..? மார்ச்சில் தொடங்குகிறதா படப்பிடிப்பு?

அஜித்குமாரின் ஏகே 62 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டராக அமைந்தது. துணிவு படத்தின் படப்பிடிப்பின்போதே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Continues below advertisement

ஏகே 62:

ஆனால், கதை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ்சிவனை லைகா நிறுவனம் விடுவித்தது. இதையடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தபோது மகிழ் திருமேனி இயக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.


அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமேனி இயக்கப்போவது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய அப்டேட்டாக ஏகே 62 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், வரும் மார்ச் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கமா?

வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் துணிவு படம் பக்கா ஆக்‌ஷன் படமாக எச்.வினோத்தின் படமாகவே  வெளிவந்தது. அதிலும் அஜித்தின் வில்லத்தனம் கலந்த நடிப்பும், நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிக்கும் விதமான அஜித்தை திரையில் ரசிகர்கள் பார்த்ததாலும் படம் நல்ல வரவேற்பை பெற்றது.  துணிவு படத்தின் படப்பிடிப்பின்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்க அஜித் – லைகா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

ஆனால், விக்னேஷ்சிவன் முதலில் அரசியல் சார்ந்த கதை தயார் செய்ததால் அஜித் அதில் நடிக்க தயக்கம் காட்டியதாகவும், வேறு கதையை தயார் செய்ய அஜித் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள்  வெளியானது. மேலும், துணிவு படம் வெளியான சில நாட்களிலே படப்பிடிப்பை தொடங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.


ஆனால், விக்னேஷ்சிவன் கதையை தயார் செய்யாததால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில்தான் மகிழ் திருமேனிக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மீகாமன், தடம், கலகத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிவர் மகிழ் திருமேனி என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித் தற்போது தனது குடும்பத்தினடருன் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்த்கது. 

மேலும் படிக்க: Drums Sivamani : ரொமான்டிக் க்ரைம் த்ரில்லர் படம்.. நீண்ட நாட்களுக்குப் பின் இசையமைப்பாளராக களமிறங்கும் டிரம்ஸ் சிவமணி..!

மேலும் படிக்க: Watch Video : மைம் மூலம் காதலை வெளிப்படுத்திய கோபி... கண்கலங்கிய போட்டியாளர்கள்... களைகட்டிய குக் வித் கோமாளி மேடை

Continues below advertisement
Sponsored Links by Taboola