நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஒன்றரை வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த விக்ரம் திரைப்படம் நேற்று வெளியாகியது. இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை அளித்துள்ளனர். திரைப் பிரபலங்களும் விக்ரம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில், கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி தன்னுடைய மகள் அனோஷ்காவுடன் இணைந்து தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது, அவரிடம் ரசிகர் ஒருவர் மேடம் படம் எப்படி இருக்கு? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஷாலினி, இப்போதுதான் படம் பார்க்கப்போகிறோம் என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




விக்ரம் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இதனால், பான் இந்தியா படமாக வெளியாகி பாக்ஸ் ஆபீசில் வசூலை குவித்து வருகிறது. போதைப்பொருள், கேங்ஸ்டர் திரைக்கதையான இந்த படத்தில் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பஹத்பாசில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.


படத்தை கைதி படத்துடன் தொடர்புப்படுத்தி கைதி வில்லன்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதால் படம் ரசிகர்களை இன்னும் கட்டிப்போட்டது. இதுமட்டுமின்றி, கடைசி காட்சியில் ரோலக்ஸ் என்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா தோன்றி அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த படத்திற்கும் தூணாக மாறி நிற்கிறார்.




கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசி்ல், சூர்யா என்று நான்கு மெகா நடிகர்களுடன் நகரும் திரைக்கதை விக்ரம் 3 பாகத்திற்கும், கைதி 2ம் பாகத்திற்கும் ரசிகர்களை தயாராக இருக்குமாறு சொல்லிவிட்டு செல்வது ரசிகர்களை இந்த படத்தை கொண்டாட வைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் விக்ரம் படம் வசூல் வேட்டையை குவித்துக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண