நடிகை அசின்:
தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் அசின். விஜய், சூர்யா, விக்ரம், அஜித், ஜெயம் ரவி, என முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட் தான்.
இவரின் அறிமுகம் மலையாள படங்கள் என்றாலும், தமிழில் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கஜினி, சிவகாசி, போக்கிரி உள்ளிட்ட மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
90-ஸ் ரசிகர்களின் ஃபேவரட் நாயகி:
ஸ்லிம்மான தோற்றம், எதார்த்தமான அழகு, ரசிக்க வைக்கும் ஹோம்லி லுக் , 90-ஸ் கிட்ஸ் இவரை ரசித்து கொண்டிருக்கும் போதே திடீர் என தென்னிந்திய சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்டு, பாலிவுட் திரையுலகின் உள்ளே நுழைந்தார். கஜினி ரீமேக்காக எடுக்கப்பட்ட திரைப்படத்தில், இவரே அமீர் கானுக்கு ஜோடியாக நடிக்க படம் பாலிவுட்டில் பட்டையை கிளப்பியது.
பாலிவுட் திரையுலகில் நுழைந்த வேகத்தில் மளமளவென 4 படங்களில் நடித்த அசின், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமாரின் நண்பர்... மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ராகுல் ஷர்மா மீது காதலில் விழுந்தார். காதலை அறிவித்த சில மாதத்திலேயே அவரை திருமணம் செய்து கொண்ட அசின், முழுமையாக திரையுலகில் இருந்து விலகினார். இவருக்கு ஆரின் என்கிற மகள் ஒருவர் உள்ளார்.
அசின் சொத்து மதிப்பு:
தன்னுடை மகளின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மறக்காமல் புகைப்படங்கள் வெளியிடும் அசின்... திருமணத்திற்கு முன் 134 கோடிக்கு சொத்துக்கு மட்டுமே அதிபதியாக இருந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர், இவரின் சொத்து மதிப்பு 10 மடங்கு கூடியது. அதாவது தற்போது அசினின் சொத்து மதிப்பு ரூ.1300 கோடி என கூறப்படுகிறது.