ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் வலிமை படத்தின் ஸ்டண்ட் காட்சிகள், கொரோனா காரணமாக வலிமை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது தொடர்பான காட்சிகள், இதுமட்டுமன்றி அஜித் பைக் ஸ்டண்ட் செய்யும் போது கீழே விழுந்தது, பின்னர் மீண்டும் முயற்சித்து ஸ்டண்ட்டை மேற்கொண்டது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
முக்கியமாக ஸ்டண்ட் காட்சியை அவர் மீண்டும் செய்த போது அதில் மகாத்மா காந்தியின் வசனம் இடம்பெற்றிருந்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், வலிமைப்படத்தின் டீஸர் நாளை வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான பதிவுகள் தற்போது ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
முன்னதாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டுவந்தனர்.