Vidamuyarchi: மீண்டும் துவங்கியது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு! அஜர்பைஜானில் கால்பதித்த படக்குழு - வெளியான நியூ அப்டேட்

Vidamuyarchi: மீண்டும் அஜர்பைஜானில் துவங்கியது அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

2023ம் ஆண்டு பொங்கலுக்கு மிகவும் மாஸாக வெளியானது தல அஜித்தின் 'துணிவு' திரைப்படம். நடிகர் விஜய்யின் 'வாரிசு' படத்துடன் நேரடியாக களத்தில் மோதியது அஜித்தின் 'துணிவு' திரைப்படம். இரு படங்களுமே ரசிகர்களின் வரவேற்பை சரிசமமாக கவர்ந்தது. 

Continues below advertisement

 

ஆவலுடன் அஜித் ரசிகர்கள் :

அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் விஜயின் 'லியோ' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அஜித் படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர் அவரது ரசிகர்கள். தற்போது நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். 

கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடிகர் அஜித்துடன் ஜோடி சேர்ந்த நடிகை திரிஷா இப்படத்தில் மீண்டும் இணைக்கிறார்கள். மேலும் ரெஜினா, ஆரவ், அர்ஜுன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். 

 

காலதாமதமான படப்பிடிப்பு :

தீபாவளிக்கு 'விடாமுயற்சி' படம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் படத்தின் இயக்குநரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சில குழப்பத்தால் படத்தை தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கியது. படப்பிடிப்பை துவங்கிய நாள் முதல் படக்குழுவினர் முழுவதும் அஜர்பைஜானிலேயே தங்கி தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தீபாவளி பண்டிகைக்கு கூட சென்னை திரும்பாமல் விடாமுயற்சியுடன் ஷூட்டிங் நடத்தி வந்தனர். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் டூயட் பாடல்கள் அங்கே படமாக்கப்பட்டது என கூறப்படுகிறது. 

மீண்டும் துவங்கிய படப்பிடிப்பு :

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென படக்குழு சென்னை திரும்பியது. அதனால் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் மீதம் உள்ள காட்சிகள் சென்னையில் படமாக்கப்படும் என சில தகவல்கள் பரவி வந்தன. ஆனால் அந்த தகவலை பொய்யாகும் விதமாக மீண்டும் அஜர்பைஜானுக்கு நேற்று முன் தினம் கிளம்பிவிட்டது 'விடாமுயற்சி' படக்குழு. 

இன்று  முதல் அஜர்பைஜானில் படப்பிடிப்பை துவங்கிவிட்டது 'விடாமுயற்சி' படக்குழு என்ற அதிகாரபூர்வமான தகவல் படக்குழுவிடம் இருந்து கிடைத்துள்ளது. சுமார் ஒரு மாத காலத்திற்கு அங்கு தான் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது என்றும், மொத்த படப்பிடிப்பையும் அங்கேயே முடித்துவிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

 

அஜித் பர்த்டே ட்ரீட் :

தீபாவளிக்கு வெளியாக தவறிய 'விடாமுயற்சி' திரைப்படம் நடிகர் அஜித் பிறந்தநாளை ஒட்டி அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் முதல் 15 நாட்களுக்கு அதிரடியான கார் ரேஸிங் காட்சி படமாக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. மீண்டும் அஜித் - திரிஷா காம்போவில் இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர். இது வரையில் திரிஷா நடிக்காத அளவிற்கு மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரமாக மிகவும் ஸ்டைலாகவும் இளமையாகவும் காட்சியளிக்கும் வகையில் அவரின் தோற்றம் ஈர்ப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என கூறப்படுகிறது.   
 

Continues below advertisement