பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) இன்ஸ்டாகிராமில் தன் மருமகள் ஐஸ்வர்யா ராயை (Aishwarya Rai) அன்ஃபாலோ செய்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த சில நாள்களாக நடிகை ஐஸ்வர்யா ராய் - நடிகர் அபிஷேக் பச்சன் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அமிதாப் குடும்ப வாரிசான அக்ஸ்த்யா நந்தா, ஷாருக்கானின் மகள் சுஹானா, ஸ்ரீதேவி இளைய மகள் குஷி ஆகியோருடன் இணைந்து அறிமுகமாகியுள்ள ஆர்ச்சிஸ் பட விழாவில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இருவரும் தங்கள் மகள் ஆராத்யாவுடன் கலந்துகொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
மேலும், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அவர்களது மகள் ஸ்வேதா என பச்சன் குடும்பமாக இந்த விழாவில் கலந்துகொண்டு லைம்லைட்டில் இருந்து வருகின்றனர். மற்றொருபுறம் தன் நாத்தனார் ஸ்வேதா பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்க்கு தொடக்கம் முதலே கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ஆர்ச்சிஸ் பட விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் வருவாரா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், விழாவுக்கு குடும்பமாக வந்து கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். இந்நிலையில், தற்போது அமிதாப் பச்சன் இன்ஸ்டாகிராமில் மருமகள் ஐஸ்வர்யா ராயை அன்ஃபாலோ செய்துள்ளதாகவும், ஆர்ச்சிஸ் பட விழாவில் குடும்பமாகக் கலந்துகொண்டு சென்ற பின் தான் அமிதாப் பச்சன் ஐஸ்வர்யாராயை அன்ஃபாலோ செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ட்விட்டர் தளத்தில் பல ஆண்டுகளாக ஆக்டிவ்வாக இருந்து வரும் அமிதாப் பூடகமான பதிவு ஒன்றையும் நேற்று பகிர்ந்துள்ளார். “எல்லாமே சொல்லியாச்சு, எல்லாமே நடந்துடுச்சு.. ” எனும் கேப்ஷனுடன் அவர் பகிர்ந்துள்ள புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் அமிதாப் பச்சன் நடிகர் சல்மான் கான், மகன் அபிஷேக், மகள் ஸ்வேதா, நடிகை அலியா பட், விராட் கோலி உள்ளிட்ட 74 நபர்களை மட்டுமே தற்போது ஃபாலோ செய்து வருகிறார். மற்றொருபுறம் ஐஸ்வர்யா ராய் தன் கணவர் அபிஷேக் பச்சனை மட்டுமே இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார்.
இந்நிலையில் அமிதாப் - தன் மருமகள் ஐஸ்வர்யா ராயை சமீபத்தில் தான் அன்ஃபாலோ செய்துள்ளார் என இணையத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.