AK61 படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அந்தப்படத்தின் புதிய லுக்கை ஏற்கனவே அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் கருப்பு வெள்ளையாக இருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் தாடி, கடுக்கன், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் என அஜித்தின் 61 லுக் அப்பட்டமாக தெரிந்தது. இந்த நிலையில் அஜித்தில் மேலும் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. 


குறிப்பாக குடும்ப நிகழ்ச்சியின் போட்டோஸ் சமீபத்தில் வைரலாகின. இந்நிலையில் நேற்று அஜித்தின் மனைவியான ஷாலினியின் தங்கை ஷாமிலி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டார். அது இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. அஜித்தும், ஷாலினியும் நடனம் ஆடிக்கொண்டு இருப்பது போலவும், ஷாலினிக்கு அஜித் அன்பு முத்தமிடும் காட்சியும் என அந்த போட்டோ இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. 23 வருட குடும்ப வாழ்க்கை என்ற தலைப்புடன் அந்த புகைப்படத்தை ஷாமிலி பதிவிட்டுள்ளார்






என்ன விஷேசம்?


மார்ச் 2 ஆம் தேதி அஜித் மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் வந்திருக்கிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்தான் களைகட்டி இருக்கிறது. முன்னதாக அஜித்திற்கு மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் ஜனவரியில் வந்திருக்கிறது. ஆனால் கொரோனா சூழ்நிலை காரணமாக பிறந்தநாளை வீட்டிலேயே சாதாரணமாக கொண்டாடியிருக்கிறார்கள். 


இந்த நிலையில் மகனின் பிறந்தநாளோடு சேர்த்து விடுபட்ட மகளின் பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாட திட்டமிட்ட அஜித், பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை ஷாம்லி இப்போது தட்டிவிட அது வைரலாகியுள்ளது.






அடுத்தடுத்த படங்கள்..


அஜித் நடிப்பில் உருவான 'வலிமை' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே ஏகே 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நாயகி பூஜா ஹெக்டே நடிக்கலாம் எனவும், அனிருத் இசையமைக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. அதுமட்டுமின்றி அஜித் 62ஐ விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதை தயாரிப்பு நிறுவனம் லைகா அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.