சுட்டிக் குழந்தையாக இருந்த காலம் தொட்டே திரையுலகில் பலர் மனதைத் தனதாக்கிக் கொண்டவர் ஷாம்லி. பேபி ஷாம்லி என்றால்தான் எல்லோருக்கும் தெரியும், நடிகர் ஷாலினியின் தங்கை. ஷாலினி பற்றி கேள்வி எழுந்தாலே அதில் அஜித் பற்றிய கேள்வி தவிர்க்க முடியாதது. நடிகர் ஷாம்லியுடனான பேட்டியில் கோலிவுட்டின் பவர் கப்பிள் ஷாலினி-அஜித் பற்றிக் கேட்கப்பட்டது. அவர் பகிர்ந்துகொண்ட சில சுவாரசியத் தகவலில் இருந்து...
”அமர்க்களம் படத்தின்போதுதான் அஜித் ஷாலினியைப் பிடித்திருக்கிறதா தகவல்கள் வெளியானது. எல்லோரையும் போல அவர் தனது விருப்பத்தை ஷாலினியிடம் சொன்னார். ஷாலினிக்காக பூக்கள் கிப்ட்டாக வாங்கி அனுப்புவார். அதை யாருக்கும் தெரியாமல் நான் தான் அவளிடம் கொண்டு போய் சேர்ப்பேன். இருவருடைய காதலிலும் நான் நிறைய உதவியா இருந்திருக்கேன். அவங்க ரெண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் நிறையவே சுதந்திரம் கொடுத்துக்கறாங்க. அது நாம் எல்லோருமே கற்றுக்க வேண்டிய விஷயம். அஜீத்தை பொருத்தவரை ஒரு தனிநபராக தான் நினைத்ததை நடத்தி முடிக்கனும் என்கிற எண்ணம் கொண்டவர்.” என்று பெர்சனல் பக்கங்கள் குறித்துப் பகிர்ந்தார் ஷாம்லி.
அண்மையில்தான் இந்த ஜோடி தனது 23வது திருமணநாளை கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.