தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் ஒரு தீவிரமான பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் 'துணிவு' படத்தின் வெற்றிக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் அஜித் குறித்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் அவரது நண்பரான உதயகுமார். 

இந்திய முழுவதிலும் பைக் சுற்றுலா பயணத்தை முடித்த நடிகர் அஜித் அடுத்ததாக உலக பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அவரின் பைக் சுற்று பயணத்தில் உடன் பயணித்த நண்பரான உதயகுமார் அஜித் பற்றி சில ஸ்வாரஸ்யமான தகவல்களை தனது சோசியல் மீடியா மூலம் பகிர்ந்து இருந்தார். 

அஜித்துடன் நடைபெற்ற ஒரு உரையாடலின்போது 'எதிர்மறையான விமர்சனங்கள், கிண்டலடிக்கும் ட்ரோல்கள், வெறுப்பேத்தும் செய்திகள், மீம்ஸ்கள் போன்றவற்றை எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் என நான் கேட்டபோது அவர் குட்டி கதை மூலம் மிகவும் அழகாக பதிலளித்தார். அவர் கொடுத்த பதில் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அப்படி அஜித் என்ன சொன்னார் தெரியுமா?

'இது போன்ற கேலி கிண்டல்கள், நெகடிவ் செய்திகளை பகிர்வது போன்ற செயல்களை நிறுத்த சொல்வது ஒரு கசாப்புகாரனிடம் போய் விலங்குகளை கொள்வதை நிறுத்துமாறு கோரிக்கை வைப்பது போன்ற நகைச்சுவையான விஷயம். அப்படி கசப்புக்காரனிடம் போய் சொன்னால் அவர் என்ன சொல்வர்? இங்கு அசைவம் உண்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதனால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்றே பதில் அளிப்பார். இருப்பினும் ஒருவர் கைவிட்டாலும் அதே வேலையை வேறு ஒருவர் செய்து சம்பாதிக்கத்தான் போகிறார். அவர்களின் குடும்பத்தை. காப்பாற்றுவதற்காக இந்த தொழிலை செய்கிறார்கள். அதே போல தான் சமூகத்தில் ஒரு சிலர் இது போன்ற மீம்ஸ்கள், நெகடிவ் விமர்சனங்கள், ட்ரோல்கள் போன்றவற்றை விரும்புகிறார்கள். அடுத்தவரின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்கும் வரையில் இது போன்ற செயல்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என பதிலளித்துள்ளார் நடிகர் அஜித்குமார். 

அஜித்தின் இந்த கதையைத்தான் அஜித் நண்பரான உதயகுமார் தனது பதிவு மூலம் பகிர்ந்து இருந்தார்.