மும்மரமாக வேலை


அஜித் தற்போது வினோத் இயக்கும் அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார். அஜித் டபுள் ரோலில் நடிக்கும் இந்தப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் எனத் தெரிகிறது. முன்னதாக வெளியான வலிமை படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்தப்படம் ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற வில்லை. அதனால் இதில் விட்டதை அடுத்தப்படத்தில் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஏகே 61 படத்தில் அஜித்தும் வினோத்தும் மும்மரமாக வேலை செய்து வருகிறார்கள். 


வைரல் வீடியோ


இதற்கிடையே அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரசிகர் வீட்டுக்கு அஜித் சென்ற வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லேட்டஸ்ட் வீடியோவா என உறுதியாக தெரியாத நிலையில் அஜித்தின் இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் அவரது ரசிகர்கள் சிலர் அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.






'ஏகே 61' 


'ஏகே 61' படம் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து இவர்கள் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். ‘ஏகே 61’ படத்திற்கான அஜித்தின் தோற்றமும் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. தற்போதைய நிலவரப்படி அதிதி ராவ் ஹைதாரி, தபு, யோகி பாபு பிரகாஷ் ராஜ் மற்றும் கவின் ஆகியோர் முக்கிய நடிகர்கள் என்று கூறப்படுகிறது.




அடுத்தடுத்து படங்கள்..


இதற்கு அடுத்தப்படியாக நடிகர் அஜித்  ‘நானும் ரெளடிதான்’  ‘ காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ்  சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இதற்கு அடுத்தப்படியாக அஜித் சிவாவின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து விகடன் நாளிதலுக்கு சிவா பேசும் போது “புன்சிரிப்புடன் அதை அஜித் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வார்கள்” என்று பேசியிருக்கிறார். அவர் சொன்னதை வைத்து பார்க்கும் போது அஜித்தை சிவா இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்தப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.