Ajith birthday special: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸ் செய்யப்படும் அஜித்தின் திரைப்படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

அஜித் அறிமுகமான அமராவதி திரைப்படத்தை 30 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் பொன்னுரங்கம்.

Continues below advertisement

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் அஜித்குமாரின் 52 வது பிறந்தநாள் மே 1 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

அஜித் பர்த்டே ஸ்பெஷல் :

1993ம் ஆண்டு நடிகர் அஜித் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் 'அமராவதி'. இயக்குனர் செல்வா இயக்கிய இப்படத்தை சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் தயாரித்தார். நடிகர் அஜித் அறிமுகமான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார். அஜித் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக அவரின் பிறந்தநாளன்று அமராவதி திரைப்படத்தை இன்றைய கலகட்டத்திற்கேற்ப டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மே 1ம் தேதி ரீ -ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் அமராவதி திரைப்படத்தின் தயாரிப்பாளர் பொன்னுரங்கம்.   

 

லேட்டஸ்ட் ட்ரெண்ட்: 


அமராவதி திரைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ மேக் செய்யப்பட்டு வெளியிடுவதற்கான பணிகள் பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ற வகையில் பின்னணி இசை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 


30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ::

அஜித் பிறந்தநாள் அன்று அவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி சர்ப்ரைஸ் கொடுக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரின் அறிமுக திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது கூடுதல் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.  இப்படத்தில் நடிகர் அஜித் - சங்கவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க நாசர், தலைவாசல் விஜய், நிழல்கள்  ரவி, சார்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அமராவதி திரைப்படம் மீண்டும் அஜித் பிறந்தநாள் அன்று ரீ ரிலீஸ் செய்யப்படுவதில் திரைப் பிரபலங்களும் சந்தோஷம் அடைந்துள்ளனர். 

அஜித் கொடுத்த மரியாதை : 


சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அஜித் தந்தை உடல் நல குறைவால் காலமானார். அவரின் இறப்பு செய்தி கேட்டதும் தயாரிப்பாளர் பொன்னுரங்கம் அஜித் இல்லத்திற்கு நேரடியாக சென்று இரங்கலை தெரிவித்துக் கொண்டார். அவர் வந்திருப்பதை அறிந்த நடிகர் அஜித் கீழ் இறங்கி வந்து அவரை விசாரித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை நடிகர் பார்த்திபன் அவரின் ட்விட்டர் பக்கம் மூலம் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Continues below advertisement
Sponsored Links by Taboola