கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித், திரிஷா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இப்படத்தில் நடிகர் அஜித் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனிகா சுரேந்தர். அப்படத்தை தொடர்ந்து மீண்டும் 'விஸ்வாசம்' படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். இப்படி நடிகர் அஜித் ரீல் மகளாக திரையுலகத்தி பிரபலமான அனிகா கிடுகிடுவென வளர்ந்து ஹீரோயினாக முன்னேறியுள்ளார். 


 



லிப்லாக் சீன் :


குட்டி பெண்ணாக இருந்த அனிகா தற்போது மலையாள திரையுலகத்தில் முன்னணி ஹீரோயினாக முன்னேறி வருகிறார். புட்டபொம்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமான அனிகாவிற்கு முதல் படமே பாராட்டுகளை குவித்தது. அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஓ மை டார்லிங்'. படத்தின் ஹீரோவாக மெல்வின்.ஜி.பாபு நடித்திருந்தார். 


இப்படத்தின் ட்ரைலர் வெளியானதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அறிமுகமான இரண்டாவது படத்திலேயே நெருக்கமான காட்சிகள், லிப் லாக் சீன் பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சர்ச்சையை ஏற்படுத்திய அந்த காட்சிகள் குறித்து அனிகா விளக்கம் தெரிவிக்கையில் அது ஒரு முழு நீள காதல் கதை என்பதால் நெருக்கமான காட்சிகள் தவிர்க்கமுடியாதவை. படத்தின் இயக்குனர் கதை சொல்லும் போதே முத்த காட்சி குறித்து கூறியிருந்தார். படத்தில் இருக்கும் காட்சிகள் ஆபாசமாக இருக்காது. பார்வையாளர்கள் படத்துடன் சேர்ந்து பார்க்கையில் அந்த காட்சியின் அர்த்தத்தை புரிந்து கொள்வார்கள் என கூறியிருந்தார்.   


கண்ணீர் அஞ்சலி :


அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அனிகாவின் புகைப்படத்துடன் கூடிய அந்த போஸ்டரில்  கண்ணீர் அஞ்சலி, செல்வி நந்தினி ஞாயிற்றுக்கிழமை 16072023  அன்று இரவு 1130 மணியளவில் அகால மரணமடைந்தார் என பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து குழம்பி போய் இருந்தனர். படம் ஒன்றுக்காக இந்த போஸ்டர் வெளியானது என்ற தகவல் வெளியான பிறகு தான் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். 


குட்டி நயன்தாரா :


சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனிகா அடிக்கடி  புகைப்படங்களை போஸ்ட் செய்வது வழக்கம். அதில் ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களும் அடங்கும். விஸ்வாசம் படத்தின் நயன்தாரா மகளாக நடித்ததாலும் சாயலில் அவரை போலவே கொஞ்சம் இருப்பதாலும் அனிகாவை குட்டி நயன்தாரா என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார்.