தல அஜித்தின் வலிமை படத்தின் முதல் பாடல் நேற்று இரவு வெளியான நிலையில், அந்த பாடலின் காட்சிகள் மூலம் பல சுவாரஸ்ய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் ‛நாங்க வேற மாறி நாங்க வேற மாறி’ என்கிற அந்த பாடல் மதுரை நகரில் நடப்பது போன்று பாடக்கப்பட்டுள்ளது. மதுரை கோயில் கோபுரத்தை சுற்றி நடக்கும் திருவிழாவில், பொய்க்கால் ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் நடக்கிறது. அது மட்டுமின்றி அந்த விழாவில் கட்டப்பட்டுள்ள ஒலி பெருக்கில் ‛அசோக் ரேடியோஸ்’ மதுரை என்று எழுதப்பட்டுள்ளது.




இதன் மூலம் வலிமை, மதுரை கதையை மையமாக கொண்டது என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த பாடலில் வரும் வரிகளும் மதுரைக்காரர்கள் பயன்படுத்தும் ஸ்லாங் முறையில் உள்ளது.  


‛‛எல்லா நாளுமே...


நல்ல நாளு தான்!


எல்லா நேரமும் 


நல்ல நேரம் தான்!


எல்லா ஊருமே...


நம்ம ஊரு தான்...


எல்லா பயலும்...


நல்ல பய தான்!


மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ


கூட இருக்கவன நட்பா நல்லா வெச்சுக்கோ!’’


என்கிற அந்த வரி மூலம், படத்தில் அஜித் மதுரை தமிழ் பேசப்போகிறார் என்றே தெரிகிறது. இதற்கு முன்பாக சிவா இயக்கத்தில் அஜித் நடத்த விஸ்வாசம் படம் தேனி பகுதியிலிருந்து மதுரை ஸ்லாங் பேசுவதாக அமைந்திருந்தது. அது பெரிய அளவில் ஹிட்டும் அடித்தது. வலிமை இயக்குவர் எச்.வினோத், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர், மதுரையை நன்கு அறிந்தவர். எனவே வலிமை படத்தில் மதுரையை மையமாக கொண்ட கதைக்களத்தையே அவர் உருவாக்கியிருப்பார் எனத்தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாகவே முதல் பாடலில் மதுரையின் கோயில் கோபுரங்கள், தோரணங்கள், திருவிழாக்கோலம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மதுரையின் அத்தனை சிறப்பைகளையும் பாடலில் அடக்கியிருக்கிறார் வினோத். 




படத்தின் சண்டை காட்சிகள் வெளிநாடுகளில் காட்சிப்படுத்தப்படுவதாக முன்பு செய்திகள் வந்த நிலையில், மதுரையிலிருந்தே கதை நகரும் என தெரிகிறது. அஜித் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கும் நிலையில், அவரது பயணம் மதுரையிலிருந்தும் தொடங்கும் வகையில் அமையும் என்பதை இந்த பாடல் மூலம் அறிய முடிகிறது. மேலும் அஜித்திற்கு மதுரை வட்டாரத்தில் இருக்கும் பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்திற்கு, இந்த மதுரை அப்டேட் பெரிய அளவில் மகிழ்ச்சியை தரும் என்றே தெரிகிறது. பரபரப்பான போலீஸ் கதையில், ஆட்டம், பாட்டம் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது படத்தின் கதை மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அடுத்தடுத்து பாடல்கள் வெளியாகும் நிலையில், இந்த எதிர்பார்ப்பு இன்னும் எகிரும் என்றே தெரிகிறது. இருப்பினும் அதுவரை பொறுத்திருந்த பார்க்கலாம்.