வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக தொடர்பு சேவையை வழங்கும் லிங்க்ட் இன் இணைய தளத்தில் இருந்து 92% பயணிகளின் விவரங்கள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில், 500 மில்லியனுக்கும் அதிகமான லிங்க்ட்இன் பயனர்களின்  தரவுகள் கசிந்ததை அந்நிர்வாகம் உறுதிப்படுத்தியது. அதில் பயனர்களின் மின்னஞ்சல் முகவரி/தொலைபேசி எண்/ பணியிடத் தகவல்/முழு பெயர்/ ஐடிகணக்கு, வயது மற்றும் பாலின ரீதியிலான விவரங்கள் ஆன்லைனில் கசியவிடப்பட்டன.  


தற்போது, 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் முகவரி/ பிறந்த தேதி / தொலைபேசி எண்/ புவிஇருப்பிடத் தரவு, ஊதியம் உள்ளிட்ட தரவகள் கசிந்துள்ளன.


இருப்பினும், தரவுகள் கசியப்படவில்லை என்று லிங்க்ட் இன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,   


ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் லிங்க்ட் இன் தரவுகளின் தொகுப்பை ஆராய்ந்தோம். பயனாளர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. இந்தாண்டு தொடக்கத்தில், கசியப்பட்ட தரவுகளும் இதில் அடங்கும். முதற்கட்ட விசாரணையில், லிங்க்ட் இன் மற்றும் பிற பல்வேறு வலைத்தளங்களில் இருந்து ஸ்கிராப் செய்யப்பட்ட தரவுகள் தான் இது. லிங்க்ட் இன் வளதளைத்தில் இருந்து ஸ்கிராப்பிங்  செய்வது விதிமுறைகளுக்கு புறம்பானது" என்று தெரிவித்துள்ளது. 


 














 






லிங்க்ட் இன் பயனர்களின் தரவுகள் டார்க் வெப்-ல் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  Restore Privacy என்ற இணைய பாதுகாப்பு (Cyber Security) நிறுவனம் இதனை முதலில் கண்டறிந்தது. கூகுளின் 9to5Google நிருவனமும் இதனை உறுதிபடுத்தியுள்ளது.