அஜித் ரசிகர்கள் #AjithTheMonarchOfTN என்ற ஹாஷ்டாகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தலைவா படம் ரிலீஸாகி 9 வருடங்கள் ஆன நிலையில் #9YrsofHistoricThalaivaa என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாக இருந்தது. அதை முறியடிக்க நடந்தது தான் இந்த போருக்கு காரணமாம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய்,அமலா பால், சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘தலைவா’. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி ரிலீசானது. ஆனால் தலைவா படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. குறிப்பாக டைட்டிலின் கீழே “Time to lead" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. விஜய்க்கு அரசியல் ஆர்வம் உள்ளதை வெளிப்படுத்து விதமாக இது அமைந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிய நிலையில் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக சொல்லப்பட்டது.
அந்த படத்தை கொண்டாடி , விஜய் ரசிகர்கள் ஒரு ஹாஸ்டேக் போட, பதிலுக்கு அஜித் ரசிகர்களும் அஜித்தை வைத்து ஒரு ஹாஸ்டேக் போட, இரண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சிவனே என்று கிடந்த விஜய் ரசிகர்களை வெறுப்பேத்த அஜித் ரசிகர்கள் ஏட்டிக்கு போட்டியாக சமந்தம் இல்லாமல் நடிகர் அஜித்தை வைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விஜய் என்ற பெயரை ட்விட்டரில் காணாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. என்னடா விஜய் ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறதே ஏதாவது புது படத்தை பற்றி அப்டேடாக இருக்குமோ என உள்ளே சென்று பார்த்தால், நடிகர் விஜயின் போட்டோவிற்கு ஒரு கேப்ஷனை போட்டு வைத்திருப்பார்கள் விஜய் ரசிகர்கள்.
Monarch என்றால் மன்னராட்சி என பொருள் படும், தமிழக சினிமாவில் எப்போதும் அஜித் அவர்களின் ஆட்சிதான் கொடி கட்டி பறக்கும் என சிம்பாலிக்கா அஜித் ரசிகர்கள் கூறிவுள்ளார்கள். 2010-ல் நடந்த கட்சி கூட்டத்தில் நடிகர் அஜித், வெளிப்படையாக சினிமா நடிகர்களை அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வற்புறுத்துகிறார்கள் என பேசினார். எங்க தலைக்கு எவ்வளோ தில்லு பாத்தியா எனும் வகையில் அந்த படத்தையும் அஜித் ரசிகர்கள் ட்வீட் செய்துள்ளனர்.
சமூக வளைதளங்களில் மாற்றி மாற்றி திட்டி கொண்டாலும், அணில் ஆமை, தல தளபதி என ரசிகர்கள் அடித்துக்கொண்டாலும் நடிகர் அஜித்தும் விஜய்யும் இன்றும் நட்பு உறவுடன் பழகிவருகின்றனர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். எதுக்கோ தொடங்கிய ட்ரெண்டிங், இப்போது தல-தளபதி குரூப் மோதலில் நிற்கிறது.