நடிகர் அஜித் குமார்(Ajith Kumar) தனது கைப்படவே எழுதிய நன்றிக் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில் கேரளாவில் தனக்கு சிகிச்சையளித்த ஆயுர்வேத சிகிச்சை மைய நபர்களுக்கு தான் அஜித் குமார் நன்றி கூறியுள்ளார்.


அந்தக் கடிதத்தில் அஜித் குமார், அன்புள்ள உன்னி கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ், நன்றி. நீங்கள் இருவரும், உங்களின் குழுவினரும் என்னை நன்றாக கவனித்துக் கொண்டீர்கள். உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் விருந்தோம்பல், அக்கறைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.


அவரே கடிதத்தில் கைப்பட எழுதியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வலிமை' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தொடர்ந்து, திரையரங்குகளில் பெரும் வசூலை ஈட்டி வரும்நிலையிலும், Zee 5 இல் OTT வெளியிடப்பட்டதில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் தனது 61வது படத்தில் எச். வினோத் உடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. 


'ஏகே 61' ஒரு வங்கிக் கொள்ளை திரைப்படம் என்றும், இதில் அஜித் குமார் எதிர்மறையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமானது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக படத்தை மூன்று மாதங்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. 




ஏகே 61' படம் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து இவர்கள் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். ‘ஏகே 61’ படத்திற்கான அஜித்தின் தோற்றமும் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. தற்போதைய நிலவரப்படி அதிதி ராவ் ஹைதாரி, தபு, யோகி பாபு பிரகாஷ் ராஜ் மற்றும் கவின் ஆகியோர் முக்கிய நடிகர்கள் என்று கூறப்படுகிறது.


இந்தநிலையில், ak 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக நடிகர் அஜித் குமார் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் பரவி படு வைரலானது. 


தற்போது நடிகர் அஜித் குமார் கைப்பட எழுதிய அந்த நன்றிக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.