விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது. த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
விடாமுயற்சி பத்திகிச்சு பாடல் லிரிக்
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான சவதீகா பாடல் வெளியாகி பெரியளவில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த டிரைலரில் இடம்பெற்ற ராப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான ' பத்திகிச்சு ' பாடல் வெளியாகியுள்ளது. விஷ்ணு எடவன் மற்றும் அமோக் பாலாஜி சேர்ந்து எழுதியுள்ளார்கள். அனிருத் மற்றும் யோகி சேது இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார்கள்.
பத்திகிச்சு ஒரு ராட்ச்சஸ் திரி
வெடிச்சுதான் இது தீருமே
பொத்திவச்ச அனு ஆயுதம் இனி
உலகையே பலி கேட்குமே
ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
கதை இன்னும் முடியல தொடருது பாரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி
வானத்தையே கிழிச்சிட்டு எவன் குதிச்சாலும்
சாவுக்கு பயமில்லை வெடிகட்டும் போர்
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி
உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்
ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி
-ராப்
வணங்காதிரு மோதிரு அடங்காதே
நீ யாரென்று மறப்பது தவறே
எவன் திமிருக்கும் பவருக்கு பணியாதே
வரலாறிலே பதியனும் பெயரே
உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்
ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி
ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
கதை இன்னும் முடியல தொடருது பாரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி
வானத்தையே கிழிச்சிட்டு எவன் குதிச்சாலும்
சாவுக்கு பயமில்லை வெடிகட்டும் போர்
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி
உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்
ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி.