ஹெச்.வினோத் இயக்கிவரும் ஏ.கே 61 படத்தின் அப்டேட் இந்தவாரம் இறுதிக்குள் வந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதுபோல், நேற்று ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது.இரண்டு செய்தியும் ஒன்றாக வந்து அஜித் ரசிகர்களை, இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது. இப்படத்திற்கு துணிவு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஆங்கிலத்தில் No Guts No Glory அதாவது, துணிவு இல்லையென்றால் புகழும் இல்லை என்ற தலைப்புடன் வெளியானது.

படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப, அஜித்தின் லுக் மற்றும்  முழு தோற்றமே கொஞ்சம் கெத்தாக தான் உள்ளது. இது, வீரம் படத்தில் வரும் கிராமத்து கெத்து அல்ல. உள்ளூர் காரன் வெளிநாடு சென்று செய்கை செய்பவனின் தோற்றம் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது நடிகர் அஜித்தின் லுக். ஆமாம், இது ஏகேவின் ஃபாரீன் வெர்ஷன்.

நடிகர் அஜித்திற்கு சிகை அலங்காரம் மற்றும் ஹேர்கட் செய்யும் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படத்திற்கான புது லுக்கை செதுக்கும் போது இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தாடி, காதுகளில் கம்மல் என ஹாலிவுட் ரேஞ்சிற்கு அசத்துகிறார் அஜித்.முன்னதாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்அசத்தி வந்தார். இப்போது,  சால்ட் அதிகமாகி பெப்பர் சிறிதளவுதான் காணப்படுகிறது. ஆனாலும் அஜித்தின்  தோல் நிறத்திற்கு வெள்ளை முடி  பொருந்தி டான் போல் காட்சியளிக்கிறார்.

முன்னதாக வெளியான வலிமை படத்தில்,அஜித்திற்கு ப்ரவுன் நிற முடி சாயத்தை அடித்து ஒரு விதமான லுக்கை உருவாக்கினர். அதில், முழுக்க முழுக்க தாடி மீசையை சவரம் செய்து சாக்லேட் பாய் லுக்கில் இருந்தார். பலரும், அவர் லுக்கை பார்த்து சேட்டு ஜி என்று ட்ரால் செய்தனர்.ஆனால் இம்முறை ட்ரால் செய்தவர்களே  துணிவு பட கெட்-அப்பை ரசித்து வருகின்றனர். இதற்கு காரணம், சாக்லேட் பாயாக இருந்தவர் திடீர் என்று ரக்கட் பாய் லுக்கிற்கு மாறிய காரணம். அஜித்தின் இந்த தோற்றம், ஃபர்ஸ்ட் லுக் வருவதற்கு முன்பே, அவரின் டூர் சென்ற போட்டோவில் இருந்து லீக் ஆனது.

சற்று நேரத்திற்கு முன்பு படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. சந்தோஷ கடலில் தத்தளித்து வரும் அஜித் ரசிகர்கள், கொஞ்சம் நாளைக்கு அப்டேட் கேட்டு போனி இடமோ அவர் பெண் ஜான்வி இடமோ சண்டையிட மாட்டார்கள் என நம்புவோம்!