கொஞ்ச தூரம் நடக்கலாமா? கை புடுச்சு நடக்கலாமா? நிஜமாவே என்ன காதலிக்கறயா என்ற கொஞ்சம் ப்ரியங்களை தாங்கிய கேள்விக்ளை எதிர்கொள்ளதா காதலே இருக்காது. காதலின் கை பிடித்து நடக்கையில் மனதுக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும் அது ஒரு இதமான காலம். கரங்கள் கோர்ப்பது என்பது ஏதோ விளையாட்டாய் நிகழ்வது கிடையாது. அது உள்ளூற நிகழ்வது. உங்களில் தொடங்கி உங்கள் காதலின் நம்பிக்கையிலோ அல்லது உங்கள் காதலில் தொடங்கி உங்களின் நம்பிக்கையிலோ அது நீளும். எனக்கு நீ இருக்கிறாய், எனும் நம்பிக்கை இருவரிலுமே ஊறி திளைத்து பூக்களை பூக்கச் செய்கிறது. காதல் எப்போதும் ஒரு நந்தவனத்தைப்போல் இருக்க விரும்புவதே இல்லை. 


மாறாக அது ஒரு வறட்சியை கடக்க தயாராகிறது. புயலில் இருந்து மீள தன்னை ஈடுபடுத்த நினைக்கிறது. ஒரு பெரும் பூகம்பத்தின் பிளவில் அகப்படாமல் இருக்க முயலும். ஓரு ஆழ்கடலின் சுழலில் சிக்கி தவிக்க அது விரும்பவே விரும்பாது. ஆனால் இப்படியான எத்தனை துயரங்களை கடக்கும்போதும் கடந்த பிறகும், காதல் எதிர்பார்ப்பது ஒன்று தான். மீண்டும் அந்த அன்பின் கரங்களை அழுத்தமாக பிடித்துக்கொண்டு உலகையே வலம் வர அது ஆவல் கொள்ளும். இது இயல்பாய் இயற்கையாய் காதலுக்கே உரித்தான ஓர் அழகிய குணம். 


காதல் எந்தவொரு மோசமான சூழலிலும் கரங்களை பிய்த்துக்கொண்டு சென்றுவிட வேண்டும் என நினைப்பதே இல்லை. காதல் கரங்களை இன்னும் இறுகப்பற்றத்தான் நினைக்கிறது. எல்லா காதலிலும் முதல் முறையாக கரங்களை கோர்க்கும் போது ஒரு சிறு தடுமாற்றத்துடன் வெட்கத்துடன் ஒருவித பதற்றத்துடன் தான் பற்றியிருக்கும். அப்படி பற்றிக்கொண்ட கரங்கள் தான், தன் காதலை ஆரத்தழுவிக்கொள்கின்றன. காதலில் கரங்கள் செய்யும் மாயாஜாலம் அளப்பரியது. கண்களில் தொடங்கும்  காதலை கரங்களில் தொடர்வது ஒரு மாயவித்தை. அப்படியான வித்தைகளில் சொதப்பல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நாங்க விரும்புறோம். சொதப்பல் ஏற்படாமல் இருக்க உங்க ராசிக்கான ஜாலியான லவ் ராசி பலன்களை ஜோடியா படிங்க...


 





மேஷம்


என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்னு நீங்க ஸ்டேட்டஸ் தெரிக்க விட்டுட்டு இருப்பீங்க இதனாலயே உங்க லவ்வர் காண்டாகி உங்கள ப்ளாக் செய்ய வாய்ப்புகள் இருக்கு. பொஷசிவ்னஸ் யாரதான் விட்டுச்சு. மாட்டிகிட்டு முழிப்பீங்க. 


ரிஷபம்


சாப்பாட்டுல கறிவேப்பில்லைய  தேடி தேடி சாப்புடற நிலமைக்கு நீங்க வந்துட்டீங்கனு உங்களுக்கே தெரிஞ்சும் லவ்வுல இறங்க தயக்கத்தோட இருந்தா எதுவுமே செய்ய முடியாதுங்க. லவ்வுல தைரியம் ரொம்ப முக்கியம். தைரியமா போய் லவ்வ சொல்லுங்க. 


மிதுனம்


லவ்வரோட சண்ட போட்டதுல மனசு கஷ்ட்டப்பட்டு சோகமான இளையராஜா பாட்ட ஸ்டேட்டஸ்ல வெச்சா, என்ன ஆச்சுனு உங்க ப்ரெண்ட்ஸ் கேக்க மாட்டாங்க. ஆளாளுக்கு ப்ளீஸ் சென்ட், அனுப்புனு சொல்லுவாங்க. சொல்லி அழ ஒரு டோழி இல்லையோ டோழன் இல்லையேனு அதுக்கு ஒரு ஸ்டேட்டஸ் வெப்பீங்க. சோகமான நாள்


கடகம்


சென்னைய தாண்டுனா பத்து ரூபா காசு செல்லாதுனு சொல்ற மாதிரி உங்க லவ்வர் ஊருக்கு போறேன்னு சொல்லீட்டு போனவங்க ஒரு மெசேஜ் கூட அனுப்ப மாட்டாங்க. ஏங்கி ஏங்கி தவிப்பீங்க. ஸ்டிரிக்ட் ஃபோமிலில பார்ட்னர செலக்ட் செஞ்சுட்டோம்னு யோசிப்பீங்க. 


சிம்மம்


முடுஞ்சதா நெனச்ச பிரச்சனைய உங்க லவ்வர் ஒரு சாரி சொல்லி ஆரம்பிப்பாங்க. ஆனா அந்த சாரி தான் இன்னைக்கு உங்களுக்கு வெக்கற செக்னு உங்களுக்கு லேட்டா தான் புரியும். முடுஞ்ச வரைக்கும் அமைதியாவே டீல் பண்ணுங்க. ஆனா உங்களுக்கு இருக்குற வாய்க்கு சாத்தியமில்லையோ தோனுது. 


கன்னி



நைட் ட்ரைன் டிராவல்ல நல்லா தூங்கீட்டு திடீர்னு எந்துருச்சு பாத்துட்டு நீங்க இறங்கவேண்டிய இடத்த ட்ரைன் க்ராஸ் பண்ணிடிச்சோன்னு நெனச்சு மனசுல பக்குனு தோனும் பாருங்க. ஆனா வெளிய எட்டி பாத்தா நீங்க இறங்க வேண்டிய இடத்துக்கு இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்னு நெனச்சு சந்தோஷ படற மாதிரி உங்க லவ்வுல இன்னைக்கு சாக்காவும் ரிலாக்ஸாவும் போகும். கன்புஷனானா நாள். 


துலாம்


என்னதான் சண்ட போட்டாலும், கோபபட்டாலும் நான் உன்னோட தான் இருக்கேன்னு உங்க லவ்வர் உங்களுக்கு சொல்லாம அவங்களோட ஏக்டிவிட்டீஸ்ல புரிய வெப்பாங்க. உங்களுக்கே எமோஷ்னல் ஆகிடும். ஃபீல் குட் டே. 


விருச்சிகம்



ஊருல இருக்க எல்லா பிரச்சனைக்கும் சொல்யூஷன் குடுக்குற உங்களால உங்க லவ்வுல தினமும் வர்ற ப்ராப்ளம்க்கு எவ்வளவு டிரை பண்ணாலும் சொல்யூஷன் கொடுக்க முடியாம முழிப்பீங்க. உங்களுக்கு உங்கள நெனச்சே சிரிப்பு வரும். 



தனுசு


ஃப்ரெண்ட் லவ்வுல சின்ன பிரச்சனை அது பத்தி முக்கியமா  பேசனும்னு  சொல்லீட்டு உங்கள கூப்ட்ட உங்க லவ்வர், பாரதி கண்ணம்மா சீரியல் பத்தி பேசி கலாச்சு விட்டா எப்படி இருக்குமோ அப்படி இருக்க போகுது. பரிதாபமான நாள். 



மகரம்


இப்ப இருக்கற வேலை வேண்டாம் அதனால உங்ககூட சரியா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலனு சொன்ன உங்க லவ்வர பாத்து நீங்க சந்தோஷபடுவீங்க. ஆனா அங்க ரிசைன் பண்ணீட்டு நைட் ஷிப்ட் வேலைக்கு போவாங்க. காலையில வந்து தூங்குவாங்க. திட்டறதா இல்ல என்ன செய்யறதுனு தெரியாம முழிப்பீங்கல்ல அந்த மாதிரி உங்களுக்கே உங்கள நெனங்சு பரிதாபமா இருக்கும். 



கும்பம்


லவ்வர்ட்ட கொஞ்ச நாளைக்கு அடிக்கடி மீட் பண்ணிக்க வேண்டாம் வீட்டுல டவுட் வர ஆரம்புச்சுடுச்சு முக்கியமான விசயம் பேசீட்டு இருக்கும்போது, ஜடேஜா வேர்ல்ட் கப் ஸ்குவாட்ல இல்ல, சிஎஸ்கே டீம்லயும் இல்ல, இனி ஜட்டுவ கிரவுண்ட்ல பாக்கவே முடியாதானு கேட்டு உங்கள காண்டு ஏத்துவாங்க. நீங்க வாங்குன வரம் அப்படி. வாட் கேன் வி டூ. அனுபவிங்க. லவ்வர அடுச்சுடாதீங்க. 



மீனம்


என் குழந்த அறிவுக்கும் அழகுக்கும் கல்யாணம் கட்டிகறதுக்கு லைன்ல நிப்பாங்கனு சின்ன வயசுல அம்மா அப்பா சொன்னத நம்பி வந்த லவ்வையும் விட்டுட்டு இருப்பீங்க. நைசா வீட்டுல கேப்பாங்க யாரயாச்சும் லவ் பண்றியானு, தலையில பெரிய கல்ல தாங்கி போட்ட மாதிரி இருக்கும். ஏமாற்றங்கள் நிறைந்த நாள். தேன்மொழி சாங் கூட செட் ஆகும்.