குட் பேட் அக்லி 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இப்படத்தை பெரியளவில் கொண்டாடி வருகிறார்கள். அர்ஜூன் தாஸ் , த்ரிஷா , பிரசன்னா , உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சிகள் தொடங்கியுள்ள நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம் 

குட் பேட் அக்லி விமர்சனம் 

முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக உருவாகி இருக்கிறது குட் பேட் அக்லி ஸ்லோ மோஷனில் நடந்து வருவது . சண்டைக்காட்சிகள் என ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்து . கதைக்கு பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை அதே போல் இடைவேளைக் காட்சியில் விஜய் படத்தின் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

அஜித் என்கிற ஒற்றை மனிதரைச் சுற்றியே மொத்த படமும் நடக்கிறது என ஒருவர் தெரிவித்துள்ளார்.