ரசிகர்களுக்கு குட்..அஜித்தை வெறுப்பவர்களுக்கு அக்லி...குட் பேட் அக்லி படத்தின் முழு விமர்சனம்

Good Bad Ugly Review : முழுக்க முழுக்க அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக குட் பேட் அக்லி படம் அமைந்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்

Continues below advertisement

குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , சிம்ரன் என யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சிகள் காலை 9 மணி முதல் தொடங்க இருக்கும் நிலையில் வெளிநாடுகளில் சிறப்பு காட்சிகள் முடிவடைந்துள்ளன. படம் பார்த்த அஜித் ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் 

Continues below advertisement

முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படம் 

பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் குட் பே அக்லி படத்தைப் பற்றி இப்படி கூறியுள்ளார். " குட் பேட் அக்லி முழுக்க முழுக்க ஒரு  மாஸ் என்டர்டெயினர் படம், அஜித் ரசிகர்களை திருபதிபடுத்த எடுக்கப்பட்ட ஒரு படம். சிறப்பாக தொடங்கும் முதல் பாதியைத் தொடர்ந்து இரண்டாம் பாதி ஒரு ஃப்ளாஷ்பேக் எபிசோடுடன் நன்றாகத் தொடங்குகிறது, ஆனால் அதன் பிறகு பெரிதாக எதுவும் இல்லை, ஒரு சில மாஸ் காட்சிகள் மிகவும் நன்றாக வந்துள்ளன, அஜித்தை ஒரு விண்டேஜ் வழியில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும், படத்தில் கதை அல்லது உணர்ச்சி ரீதியான தொடர்பு அதிகம் இல்லை, மேலும் பல வழக்கமான பில்ட்-அப் ஷார்கள் மற்றும் ஒரு கட்டத்திற்குப் பிறகு சோர்வடையச் செய்யும் அதிரடி காட்சிகள் உள்ளன. பின்னணி இசை பொருத்தமாக இருக்கிறது, ஆனால் நிச்சயமாக சிறப்பாக இருக்கவும் மேலும் காட்சிகளை உயர்த்தவும் ஒரு வாய்ப்பு இருந்தது. தயாரிப்பு மதிப்புகள் நன்றாக உள்ளன. எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் போகலாம், ஆனால் நிச்சயமாக சமீபத்திய காலங்களில் அஜித்தின் சிறந்த படம், சில சுவாரஸ்யமான மாஸ் தருணங்களுக்கும் ஒரு விண்டேஜ் மாஸ் அஜித்தைப் பார்க்கவும் இந்த படத்தைப் பார்க்கலாம். " 

மற்றொரு நபர் இப்படி கூறியுள்ளார்

" குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்கு மட்டுமேயான படம் . "அஜித் ரசிகர்களுக்கு படம் குட் என்றாலும் நடு நிலை ரசிகர்களுக்கு படம் பேட் , அஜித்தை வெறுப்பவர்களுக்கு இது அக்லியான ஒரு படமாக இருக்கும் "

Continues below advertisement
Sponsored Links by Taboola