சோஷியல் மீடியாவில் நேற்று திருச்சிதான் ட்ரெண்டிங்கில் இருந்தது. காரணம் அஜித்குமார். சில தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பிய அஜித் நேற்று காலை திருச்சிக்கு விசிட் அடித்தார். 


ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சி வந்திருந்த அஜித்தின் ஏர்போர்ட் வீடியோ காலையிலேயே ட்ரெண்ட் ஆனது. விமான நிலையத்திலேயே ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவர்களை நோக்கி கையசைத்து அன்பை வெளிப்படுத்தினார் அஜித். பின்னர் துப்பாக்கி சுடும் போட்டிக்காக திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்திற்கு அஜித் சென்றார். ஆனால் அஜித் இங்குதான் வந்திருக்கிறார் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் பரவ பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் ஆயுதப்படை வளாகத்தை சுற்றி குவிந்தனர். அஜித்தை பார்த்துவிட்டுதான் செல்வோம் என பெரிய திருவிழாகூட்டமே கூடிவிட்ட நிலையில் கட்டிடத்தின் மேல் நின்றும், கட்டட வாசலில் நின்றும் ரசிகர்களை சந்தித்தார். கடுமையான கூட்டம் என்பதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வயது வித்தியாசமின்றி பல ரசிகர்கள் அஜித்தை பார்க்க ஆர்வமுடன் காத்திருந்தனர். அதில் கைக்குழந்தையுடன் பெண்மணி ஒருவர் காத்திருந்த வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இந்த தகவல் அஜித்துக்கு செல்ல உடனடியாக அந்த பெண்ணை அருகில் அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் அஜித். சிறுமியை கையில் தூக்கி ஏந்தி, அந்த பெண்மணி குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.






விரைவில் அஜித் ஏகே 61 திரைப்பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவுள்ளார். ஏகே 61 படக்குழு ஷூட்டிங்குக்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. தற்போது பெரிய வங்கி செட்டை உருவாக்கி உள்ளனர் படக்குழுவினர். `ஏகே 61’ திரைப்படம் உண்மைச் சம்பவமாக நடைபெற்ற வங்கிக் கொள்ளை நிகழ்வு ஒன்றைத் தழுவி உருவாகப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது வங்கி செட் ரெடியாகியுள்ளது.






சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள 102 ஆண்டுகள் பழமையான எஸ்பிஐ வங்கியை முன்மாதிரியாகக் கொண்டு Your Bank என்ற பெயரில் மிகப்பெரிய செட்டை ராமோஜி பிலிம் சிட்டியில் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் கசிந்துள்ளன. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகிவிட்ட நிலையில் இனி விறுவிறுவென படம் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.