Ajith Kumar : ”ரசிகர்களை நேசிக்கிறேன்” பாசத்தை காட்டிய அஜித்.. குஷியில் ஏகே ரசிகர்கள்
தனது ரசிகர்களை அளவுக்கடந்த விதத்தில் நேசிக்கிறேன் என்று அஜித் கூறியுள்ளது அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

துபாயில் நடக்கும் கார் ரேசில் நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்கள் குறித்து பாசத்துடன் பேசியுள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக இருக்கும் அஜித் விஜய் ஆகிய இருவரும் தங்களில் துறையில் இருந்து விலகி புதிய பாதையில் பயணிக்க துவங்கியுள்ளனர். நடிகர் விஜய் தவெக என்கிற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதே போல அஜித்தும் அஜித் குமார் ரேசிங் என்கிற ரேசிங் அணியையும் ஆரம்பித்துள்ளார். இதில் அந்த அணியின் கேப்டனாக அஜித் உள்ளார். செப்டம்பர் வரை நடைப்பெற உள்ள இந்த கார் ரேஸ் தொடரில் அஜித் பங்கேற்கிறார். அதன் பின்னர் ஐரோப்பாவில் நடைப்பெறும் கார் பந்தயங்களிலும் அவரது அணி கலந்துக்கொள்ள உள்ளது.
சினிமாவுக்கு கேப் விட்ட அஜித்:
இதனால் அஜித் சினிமா மற்றும் கார் ரேசிங் ஆகிய இரண்டையும் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் ரேசிங் சீசன் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று அஜித் அறிவித்தார். இதற்கு பலரும் அஜித்தை பாராட்டி வருகின்றனர். அஜித் பேசியதாவது " நான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்ல தேவையில்லை. ஒரு டிரைவராக மட்டுமில்லாமல் நான் அஜித் குமார் ரேஸிங் குழுவின் உரிமையாளர் என்பதால் நான் போட்டி காலத்தில் சினிமாவில் நடிக்க மாட்டேன். வரும் அக்டோபர் முதல் மார்ச் வரை படங்களில் நடித்து அதன் பின் போட்டியில் என்னுடைய முழு கவனத்தை செலுத்துவேன்" என அஜித் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Ajith Kumar Racing : ஓய்வே கிடையாது! கார் ரேஸ்சில் அஜித் எடுக்கும் ரிஸ்க்.. போட்டியின் விதிகள் என்ன?
ரசிகர்களை அன்பு செய்கிறேன்:
இந்த நிலையில் அஜித் பங்கேற்கும் 24 மணி நேர கார் பந்தயம் துபாயில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பந்தயம் தொடங்குவதற்கு முன்னதாக பேசிய அஜித் பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், கார் ரேஸ் மற்றும் நடிகராக இருப்பதற்கு உடல் வலிமை மிக முக்கியமானதாக இருக்கும், இது மற்ற வேலைகளுக்கும் பொருந்தும். எனக்கு ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது பிடிக்காது. அதனால் தான் எதாவது ஒன்றில் எனது முழு கவனத்தையும் செலுத்துகிறேன் என்றார்
தொடர்ந்து இந்த வருடங்களில் நீங்கள் படங்களை நடிப்பதை குறைத்துள்ளீர்களா என்கிற கேள்விக்கு பதலளித்த அஜித், நான் இந்த வருடம் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளேன், ஒரு படம் ஜனவரியிலும்(விடாமுயற்சி) மற்றோரு திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் அதனால் என்னால் கார் பந்தயத்தில் எனது முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்றார். மேலும் பேசிய அஜித் நீங்க இங்க பார்க்குறீங்களே என் ரசிகர்கள் இவர்களை அளவுக்கடந்த விதத்தில் நேசிக்கிறேன் என்றவுடன் ரசிகர்கள ஆரவாரம் செய்தனர்.
நீண்ட நாட்களுக்கு அஜித் தனது ரசிகர்களை குறித்து பேசியுள்ளது அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.