Ajith Kumar Racing : ஓய்வே கிடையாது! கார் ரேஸ்சில் அஜித் எடுக்கும் ரிஸ்க்.. போட்டியின் விதிகள் என்ன?

Ajith Kumar : நடிகர் அஜித் குமார் துபாயில் பங்கேற்கும் 24 மணி நேர கார் ரேஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தி வருகிறது.

Continues below advertisement

தமிழ் சினிமாவின்  முன்னணி ஹீரோவான அஜித் குமார் இந்த ஆண்டு இரண்டு படங்களை நடித்துவிட்ட நிலையில் தனது ஃபேஷன்னான ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் பங்கேற்க போகும் கார் ரேஸ் எவ்வாறு நடக்கும் அதில் உள்ள விதிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

Continues below advertisement

அஜித் குமார் ரேசிங்: 

நடிகர் அஜித் குமார் துபாயில் பங்கேற்கும் இந்த கார் ரேஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. ஆனால் இந்த ரேஸ் மற்ற கார் ரேஸ்களை போல் இல்லாமல் சற்று மாறுப்பட்ட ஒன்றாகும். வழக்கமான கார் ரேஸ்சில் குறிப்பிட்ட லேப்கள் ஓட்டி அதில் முதலாவதாக வருபவர் தான் வெற்றியாளர். 

24 மணி நேரம் ரேஸ்: 

அஜித் குமார் பங்கேற்கும் இந்த ரேஸ் ஒரு எண்டுரன்ஸ் (Endurance) பார்மட் ரேஸ் ஆகும். அதாவது 24 மணி நேரம் நடக்கும் ரேஸ், இன்று மதியம் 1 தொடங்கும் ரேசில் காரை எடுத்தால், அடுத்த நாள் மதியம்  1 மணி வரைக்கும் ஓட்ட வேண்டும். ஒரு அணியில் 4 டிரைவர்கள் இருப்பார்கள், அவர்கள்  மாற்றி மாற்றி கார் ஓட்ட வேண்டும், ஒரு டிரைவர் குறைந்தப்பட்சம் 2 மணி நேரம் ஓட்ட வேண்டும்.

இதில் அணியின் கேப்டன் தான் அதிக நேரம் காரை ஓட்ட வேண்டும், அப்படி பார்த்தால் அஜித் குமார் ரேசிங்கின் கேப்டன் அஜித் குமார் தான், அதனால் அவர் 14 மணி நேரம் முதல் 18 மண் நேரம் வரை காரை ஓட்ட வேண்டும்.

24 மணி நேரம் உள்ளதே என்று பொறுமையாக எல்லாம் கார் ஓட்ட முடியாது, இந்த ரேஸ் டிராக்கில் குறைந்தது 240கி.மீ வேகத்தில் கார் ஓட்ட வேண்டும். மேலும் இந்த ரேஸ் வெறும் டிரைவர் சமந்தபட்டது மட்டும் இல்லை 24 மணி நேரம் ஓடுகின்ற அளவுக்கு காரை தயார் செய்ய வேண்டும்.

அதில் வண்டியில் மைலேஜ், டயர், மெக்கானிகல் கோளாறு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அதுக்கென்று தனியாக ஒரு மெக்கானிக் டீம் நிச்சயம் தயார் நிலையில் இருக்கவேண்டும்.

கடுமையான பயிற்சி:

கார் ஆனது பிட் ஸ்டாப் வரும் டயர் மாற்றுவது என அனைத்தையும் 45 நொடிகளில் இருந்து 55 நொடிகள் வரை தான கால அவகாசம் தான். இந்த இடைப்பட்ட நேரத்தில்  காருக்கு எரிப்பொருள் நிரப்புவது, டிரைவர் மாற்றுவது என அனைத்தையும் முடிக்க வேண்டும்இப்படி தொடர்ந்து பல மணி நேரம் குறைந்தது 240 கிலோமீட்டர் வேகத்தில் காரை கடுமையான பயிற்சி தேவை, அப்படி தொடர்ந்து 6 மணி நேரம் ஓட்டி பயிற்சி எடுக்கும்போதுதான் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது

எந்த அணி 24 மணி நேரத்துல அதிக லேப்களை ஓட்டி இருக்கிறார்களோ அவர்கள் இந்த ரேசின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். 

Continues below advertisement
Sponsored Links by Taboola