குட் பேட் அக்லி
அஜித்தின் 63 ஆவது படமான குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். த்ரிஷா , பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குட் பேட் அக்லி டீசர்
குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் இன்று 7 : 03 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்பான ரசிகர்கள் படக்குழுவை திட்டி வருகிறார்கள். சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அப்டேட் 8:02 மணிக்கு வெளியாகும் என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்