ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெயினர் குட் பேட் அக்லி. த்ரிஷா, பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ஓஜி சம்பவம் வெளியாகியுள்ளது.


ஓஜி சம்பவம் - குட் பேட் அக்லி முதல் பாடல்


ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜி.வி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளார்கள். லியோ , விக்ரம் , விடாமுயற்சி ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதிய விஷ்ணு எடவன் இந்த பாடலை எழுதியுள்ளார். முன்னதாக விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற பத்திகிச்சு பாடலைத் தொடர்ந்து அஜித்திற்கு விஷ்ணு எடவன் எழுதும் இரண்டாவது பாடல் இது.