அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் மாணவ- மாணவி கட்டிப்பிடித்து நடனமாடும் வீடியோ ஒன்று, ''பெற்றோர்களே உஷார்'' என்று தலைப்பிட்டு வாட்ஸப்பில் இந்த வீடியோ வைரலாகப் பகிரப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளது.
அதில், ’’அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் ஆடல் பாடல் நடைபெறவில்லை. அவ்வாறு தவறான காணாளி பரவி வருகிறது. இது அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி அல்ல. அதில் ஆடுபவர்கள் அரசுப்பள்ளி மாணவ- மாணவிகளும் அல்ல.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூரைச் சேர்ந்த நடனக் குழுவினர், பள்ளிச் சீருடை அணிந்து திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதை அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று தவறாகப் பரப்பி வருகின்றனர்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.