குட் பேட் அக்லி முதல் விமர்சனம் வெளியானது.. சம்பவத்தை பார்த்து மிரண்டுபோன சென்சார் அதிகாரிகள்
Good Bad Ugly First Review: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது

குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் நாளை ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , சிம்ரன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். மாஸான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
குட் பேட் அக்லி படத்தின் கதை
மிகப்பெரிய கேங்ஸ்டரான ஏகே என்கிற அஜித் தனது மகனுக்காக வன்முறையை கைவிடுகிறார். அதே மகனுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் போது ஏகே மீண்டும் வன்முறையை கையில் எடுப்பதே குட் பேட் அக்லி படத்தின் கதை சுருக்கம். வித்தியாசமான கதாபாத்திரங்கள் , ஆக்ஷன் , மாஸ் வசனங்கள் என அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக இப்படம் இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும் அஜித்தின் கரியரில் குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது
Just In




குட் பேட் அக்லி முதல் நாள் வசூல்
குட் பேட் அக்லி திரைப்படத்தின் முன்பதிவுகள் தொடங்கி டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. பெரும்பாலான திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் ஹவுஸ் ஃபுல்லாகி இருக்கின்றன. இப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 30 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று உலகளவில் 60 முதல் 70 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
குட் பேட் அக்லி முதல் விமர்சனம்
தமிழ் மற்றும் தெலுங்கு தவிர்த்து வெளிநாடுகளில் பெரியளவில் வெளியாக இருக்கிற இப்படம். வெளிநாடுகளில் படத்தை பார்வையிட்ட சென்சார் போர்ட் அதிகாரிகள் இப்படத்தைப் பாராட்டி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழுக்க முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு படமாக குட் பேட் அக்லி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது.