குட் பேட் அக்லி (Good Bad Ugly)


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போஸ்டர் ஏன் வெளியானது என்கிற கேள்வி எழுந்தது. இதன் பின் இருக்கும் உண்மையான காரணம் தற்போது தெரிவந்துள்ளது. இந்த பின்னணியை தெரிந்துகொண்ட பின் நடிகர் அஜித்தின் மேல் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் மரியாதையும் அன்பும் இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


விடாமுயற்சி படத்தில் தாமதம்


மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக தாமதாகி உள்ளது. இப்படத்தில் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். படம் தாமதமானதால் அவர் மற்ற படங்களிலும் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சாமர்த்தியமாக யோசித்த அஜித் குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர்களிடம் பேசி சுப்ரீம் சுந்தரை இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்ட்ராக போட சம்மதிக்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மே 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் படப்பிடிப்பிற்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருந்த நிலையில் மூன்று பிரம்மாண்டமான செட்கள் ஹைதராபாதில் உருவாக்க வேண்டியதாக இருந்தது. 700 நபர்கள் சேர்ந்து இரவுப் பகலாக உழைத்து மூன்று செட்களை மே 9 ஆம் தேதிக்குள் உருவாக்கி முடித்துவிட்டார்கள். திட்டமிட்டது போல் மே 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்டமாக ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப் பட்டன. 


ஃபர்ஸ்ட் லுக் வெளியானதன் காரணம் என்ன






இந்த செட் பணிகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நடிகர் அஜித்துடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள கேட்டுள்ளார்கள். ஆனால் அஜித் படத்தின் கெட் அப் இல் இருந்ததால் செல்ஃபீ எடுத்துக்கொண்டால் அவரது லுக் தெரிந்துவிடும் என்று படக்குழுவினர் யோசித்தனர். இரவுப் பகலாக கடுமையாக அந்த உழைப்பாளிகளை ஒரு செல்ஃபி கூட இல்லாமல் திருப்பி அனுப்ப மனமில்லாமல் அஜித் கொடுத்த ஐடியா தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டால் எல்லாருடனும் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இதன் காரணத்திலான் தான் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது