குட் பேட் அக்லி


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. உலகளவில் உள்ள அஜித் ரசிகர்கள் இப்படம் வெளியாகியுள்ளதை கோலாகலமாக கொண்டாடி வரவேற்றுள்ளார்கள். அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , சிம்ரன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

Continues below advertisement


குட் பேட் அக்லி விமர்சனம்


அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக முழுக்க முழ்க்க மாஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது குட் பேட் அக்லி. படத்தில் அஜித் ரசிகர்களை திருபதிபடுத்தும் விதமாக பல காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் கதை ரீதியாக இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது ஒரு சில ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. 


ஆனால் தற்போது அதைப் பற்றி கவலை இல்லாமல் ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்கில் விசிலடித்து கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக படத்தில் அங்கங்கு ரசிகர்களுக்காக சில சர்பைஸ் கொடுத்திருக்கிறார்கள் ஆதிக் மற்றும் அஜித் 


குட் பேட் அக்லி படத்தில் விஜய் வசனம்


குட் பேட் அக்லி படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் கமலின் சகலகலா வல்லவன் படத்தின் இளமை இதோ பாடல் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பாடல் வரும்போது ஒட்டுமொத்த திரையரங்கமே வை செய்துள்ளது. அதேபோல் இடைவேளைக் காட்சியில் விஜயின் போக்கிரி பட வசனமும் இடம்பெற்றிருப்பது உற்சாகத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது