குட் பேட் அக்லி 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா , அர்ஜூன் தாஸ், சிம்ரன் , யோகிபாபு , பிரபு , பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மாஸ் படமாக உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம் 

குட் பேட் அக்லி இரண்டு வார வசூல் 

குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டு வார வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி இரண்டு வாரங்களில் குட் பேட் அக்லி தமிழ்நாட்டில் ரூ 172 கோடி வசூலித்துள்ளது. உலகளவில் இப்படம் 290 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.