கடந்த சில தினங்களாகவே இந்திய சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களின் அப்டேட்டுகள், தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் நடந்த சுவாரஸ்யமான சினிமா தகவல்கள் குறித்து காணலாம். 


டப்பிங் பேசிய அஜித் 






அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கியவர்  ஹெச். வினோத். இவர் 3வது முறையாக அஜித்துடன் இணைந்துள்ள படம் “துணிவு”.  ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு படத்துக்கு எதிராக இப்படம் வெளியாகவுள்ளதால் இப்போது இருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனிடையே துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்றைய தினம் அஜித் தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்ததாக தெரிவித்து அவரின் புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலானது. 


சிறப்பு தோற்றத்தில் ரஜினி 






ரசிகர்கள் எதிர்பார்த்த ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வந்துவிட்டது. லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் - விக்ராந்த் நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்தில் தான் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கதை திருட்டு சர்ச்சையில் அட்லி






ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் மூலம் கமர்ஷியல் இயக்குநராக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட அட்லீ, அடுத்ததாக இந்தியில் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மோஷன் போஸ்டர் வரவேற்பை பெற்ற நிலையில் வழக்கம் போல இந்த படமும் கதை திருட்டில் சிக்கியுள்ளது. விஜய் நடித்த மெர்சல், கார்த்தி நடித்த சர்தார் படம் தான் ஜவானின் கதை என சொல்லப்பட்ட நிலையில், தற்போது 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான பேரரசு படத்தின் கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அட்லீ மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு நிறுத்தம்? 






மண்டேலா படத்தின் இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வந்தார். இதில் ஹீரோயினாக அதிதி ஷங்கர் ஒப்பந்தமான நிலையில்  இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தீபாவளிக்கு சிவாவின் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் தோல்வியை தழுவியதால் சில காட்சிகளை மாற்ற சொல்லி அஸ்வினிடம் அவர் கேட்ட நிலையில், இருவருக்கும் இதில் உடன்பாடுன் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என படக்குழு மறுத்துள்ளது.