16 Years Of Billa : அஜித்துக்கு கேங்ஸ்டர் முகம் கொடுத்த பயணம்.. 16 ஆண்டுகளைக் கடந்தது பில்லா..

அஜித் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் இன்றுடன் 16 ஆண்டுகளை கடந்துள்ளது.

Continues below advertisement

பில்லா

அஜித் குமார் நடிப்பில் பில்லா திரைப்படம் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியானது. நயன்தாரா, பிரபு,  நமிதா, ரஹ்மான் , சந்தானம், ஜான் விஜய் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். பில்லா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன. விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது பில்லா திரைப்படம்.

Continues below advertisement

கதை

பில்லா என்கிற மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால் தனக்குப் பின் மிகப்பெரிய கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை விட்டு சென்றிருக்கிறார், இந்த கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்கு பில்லா மாதிரியே இருக்கும் இன்னொருவரை பயண்படுத்த திட்டமிடுகிறது காவல்துறை. கிராமத்து பின்னணியைச் சேர்ந்த வேலுவை கண்டுபிடிக்கிறார் காவலர் ஜெயபிரகாஷ் (பிரபு). மிக சுவாரஸ்யமாக பல திருப்பங்களுடன் செல்லக்கூடியது மீதிக் கதை.

அஜித்துக்கு கேங்ஸ்டர் அடையாளம் கொடுத்த பில்லா

1980-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளியான பில்லா திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட பில்லா திரைப்படம் அஜித்குமாரை அதுவரை யாரும் பார்த்திராத ஒரு ஸ்டைலான கேங்ஸ்டராக காட்டியது.  கோட் அணிந்து யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அஜித்குமார் நடந்து வரும் காட்சிகள் இன்றுவரை அஜித் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவ்ரேட் காட்சியாக இருக்கின்றன. மேலும் ரஜினிகாந்த் படங்களை ரீமேக் செய்து நடிப்பது என்றால் அதில் இருக்கும் மிகப்பெரிய சவால் ரஜினியின் எந்த சாயலும் இல்லாமல் இருக்க வேண்டும் . அஜித் குமார் அசால்ட்டாக பில்லா படத்தை தன்னுடைய அடையாளமாக்கி இருப்பார். 

பில்லா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்து இதே மாதிரியான நிறைய கேங்ஸ்டர் படங்கள் வெளியாகின. இதில் ஒரு சில படங்கள் சூப்பரான வெற்றியும் ஒரு சில படங்கள் சுமாரான வெற்றிபெற்றன. அதில் ஒன்று பில்லா 2. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பில்லா திரப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தின் பல்வேறு காட்சிகளை பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகிறார்கள் ரசிகர்கள். 

Continues below advertisement
Sponsored Links by Taboola