தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் அட்டகாசம். காதல் மன்னன், அமர்க்களம் என்று அஜித்திற்கு வெற்றிப்படங்களை அளித்த இயக்குனர் சரண் இயக்கத்தில் இந்த படம் வெளியானது. 

Continues below advertisement

அட்டகாசம்:

2004ம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரைப்படமான இந்த படம் அப்போதே நல்ல வசூலை எட்டியது. இந்த படம் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அஜித் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித்தை ரசிகர்கள் அன்புடன் தல என்று அழைப்பது வழக்கம். இந்த படத்தில் தல போல வருமா, தெக்குச் சீமையிலே என்னப் பத்தி கேளு போன்ற பாடல்கள் அஜித் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ஆகும். அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ரீ ரிலீசான நேற்று முதல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Continues below advertisement

வசூல் மழை:

பெரிய திரைப்படங்கள் எதும் ரிலீசாகாத நிலையில் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மற்றும் மற்ற ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது. சென்னையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் படத்தின் டிக்கெட் தற்போதே பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. இதனால், இந்த படத்திற்கு நல்ல வசூல் குவிந்து வருகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அஜித் இந்த படத்தில் ஜீவா மற்றும் குரு என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பூஜா, சுஜாதா, பாபு ஆண்டனி, மகாதேவன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா, கருணாஸ், வையாபுரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இந்த படத்தில் நடித்திருப்பார்கள். 

ரசிகர்கள் வரவேற்பு:

பரத்வாஜ் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார். படத்தின் அனைத்து பாடல்களும் அப்போதே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவை ஆகும். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை மேற்கொண்டிருப்பார். வெங்கடேஷ் அனுக்ராஜ் ஒளிப்பதிவு செய்திருப்பார். விஜயம் சினி காம்பைன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஐங்கரன் இன்டர்நேஷனல் இந்த படத்தை விநியோகம் செய்தனர்.

பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத சூழலில் அட்டகாசம் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களை ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்கின்றனர். ரீ ரிலீஸ் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.