தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். தற்போது இவர் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

Continues below advertisement

அமர்க்களம் ரீ ரிலீஸ்:

அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்த பிறகு இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவரது அடுத்த படத்தை குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு மட்டுமே வெளியானது. தற்போது கார் பந்தய அணியை நடத்தி வருவதால் அஜித்குமார் தனது ஊதியத்தை உயர்த்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவரது அடுத்த படத்தை தயாரிப்பதற்கான நிறுவனம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அஜித்தின் ப்ளாக்பஸ்டர் படமான அமர்க்களம் படம் வரும் 24ம் தேதி மீண்டும் வெளியிடப்பட உள்ளது. அஜித் அதிரடி கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் இந்த படமே ஆகும். 

Continues below advertisement

ட்ரெயிலர் ரிலீஸ்:

அஜித்குமாரும், அவரது மனைவியுமான ஷாலினி இணைந்து நடித்த ஒரே படம் இந்த படம் ஆகும். அஜித்தின் பிறந்தநாள் வரும் மே 1ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அமர்க்களம் படம் தேர்தலுக்கு அடுத்த நாள் வெளியாகிறது. இன்று ட்ரெயிலர் ரிலீசாகிறது.

அஜித்குமார் முதன்முறையாக ஆக்ஷன் கதாநாயகனாக நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அஜித்தின் 25வது படமான இந்த படத்தை இயக்குனர் சரண் இயக்கியுள்ளார். வெங்கடேஸ்வராலயம் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்துள்ளார்.

நட்சத்திர பட்டாளங்கள்:

அஜித் - ஷாலினி ஆகியோருடன் ரகுவரன், நாசர், விணு சக்கரவர்த்தி, சார்லி, தாமு, வையாபுரி, ரமேஷ் கண்ணா, ராதிகா, அம்பிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். அஜித் இந்த படத்தில் ரவுடியாக நடித்திருப்பார். பரத்வாஜ் இசையமைத்த இந்த படத்தில் இடம்பிடித்த சத்தமில்லாத தனிமை கேட்டேன் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற பாடல் ஆகும்.

அஜித் - ஷாலினி:

இந்தபடத்திற்கு பிறகு அஜித் - ஷாலினி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சரண் - அஜித் கூட்டணியில் முதலில் உருவான காதல் மன்னன் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற, சரண் - அஜித் கூட்டணியில் உருவான அமர்க்களம் அஜித்தின் கேரியரில் அவரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது.

நீண்ட நாட்களாக அஜித்தின் படம் வெளியாகாமல் உள்ள நிலையில், இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.