துபாயில் நடைபெற்ற எஸ்-24 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றியை அஜித், அவரது மனைவியுடன் கொண்டாடிய க்யூட் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
கார் ரேஸும் அஜித்தும்..
நடிகர் அஹித் குமார் தமிழ் திரையுலகின் நட்சத்திரம். ரசிகர்கள் ‘அஜித் அஜித்’ என்று கொண்டாடும் அளவிற்கு அவருக்கு தனியே ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ‘விடா முயற்சி’ திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். விவேகம் திரைப்படத்திற்கு பிறகு அஜித் ஸ்க்ரீனில் காணும் ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமூக வலைதளத்திலும் அஜித் ஆக்டிவ் இல்லை என்பதால் அவர் பற்றிய தகவல்கள் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்திவிகிறது.
அஜித் குமார் ரசிகர்கள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். அவருக்கு பைக், கார் ரேஸ் என்றால் அவ்வளவு காதல். ஏற்கனவே பல பந்தயங்களில் பங்கேற்றிருக்கிறார். அதில் ஏற்பட்ட விபத்து அவரது வாழ்க்கையை மாற்றியது. வெவ்வேறான கதைகள், பழக்கத்திற்காக ஒருவருக்கு வாய்ப்பு தருவது உள்ளிட்டற்றை செய்ய கூடியவர் அஜித்.
இப்போது துபாயில் அஜித் குமார் கார் ரேஸிற்கான பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது. அஜித் சினிமா தொடர்பாக அப்டேட் வரவில்லை என்றாலும், அஜித் அவருக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் கவனம் செலுத்துவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், “ அஜித் எல்லாருக்கும் உண்மையான இன்ஸ்ப்ரேசன். தனக்குப் பிடித்தவற்றில் கவனம் செலுத்துகிறார். எவ்வளவு தோல்விகள் என்றாலும் தொடர்ந்து முயற்சி செய்கிறார். அவர் ரொம்ப அழகு.” என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
துபாயில் நடக்கும் எஸ்24 கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் தனது அணியை களமிறக்கினார். இந்த பந்தயம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அஜித்தின் அணி 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. அஜித் குமார் கார் பந்தயத்தில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அஜித் குமார் கார் பயிற்சி மேற்கொண்டபோது விபத்து ஏற்பட்டது. அதனால், அவர் சமீபத்தில் நடக்கும் போட்டிகள் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார்.
போர்ஷே 992 கார் பிரிவில் அஜித்தின் அணி 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. 3வது இடம்பிடித்த மகிழ்ச்சியில் அஜித்குமார் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். அணியினருடன் கொண்டாடினார். இந்திய நாட்டின் தேசிய கொடியை கையில் ஏந்தி கார் பந்தய மைதானத்தில் உலா வந்தார்.
க்யூட் தருணங்கள்:
வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவிக்க ரேஸ் லேன்க்கு வந்தார். கூட்டத்திற்கு நடுவே, அஜித் ஷாலினியை கட்டியணைத்து முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இருவரின் அழகான காதல் ரசிகர்கள் கொண்டாடினர்.