Ajith birthday :52-வது வயதில் அடியெடுத்து வைக்கும் நடிகர் அஜித்... அஜித் ஏன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல்?

நடிகர் அஜித் குமார் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித் ஏன் ஸ்பெஷல் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

Continues below advertisement

நடிகர் அஜித் குமார் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித் ஏன் ஸ்பெஷல் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

Continues below advertisement

அஜித் ஏன் ஸ்பெஷல்?

நடிகர் அஜித்தின் பெயரைக் கேட்டாலே ஆரவாரமிட ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. ஒரு பெரிய மேடையில், இளைஞர்கள் மத்தியில் பேசும் போது கைத்தட்டல் வாங்க நினைத்தால்,  அஜித் என்ற ஒற்றைப் பெயரை சொன்னாலே போதும். அந்த அளவிற்கு அவரை கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அஜித்தை இவ்வளவு பிடித்து போக  என்னதான் காரணம் என கேட்டால், ஒன்றா? இரண்டா என அவரின் ரசிகர்கள் காரணங்களை அடுக்குகின்றனர். நடிகர் அஜித் சினிமாவில் மட்டுமல்லாது, கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என பல்வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவராய் இருப்பதும் அவருக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் இருப்பதற்கு காரணமாக பார்க்கப்படுகின்றது. 

அஜித், சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாது தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். கிசு கிசுக்களில் சிக்காதவர் அஜித். சினிமாவை தாண்டி, ரேசர், உள்ளிட்ட தன் பன்முகத் திறமையால் அவரை தூற்றியோரையும் வியக்க செய்தவர். 

ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித் 

சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் தான் பலம்.  ரஜினி, கமல், அஜித், விஜய், உள்ளிட்டோருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் சிறந்த நடிகர்களாக மக்களால் அங்கிகரிக்கப்பட்டு,  நல்ல படங்களை கொடுத்து வரும் சில நடிகர்களுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிலான ரசிகர் பட்டாளம் இருப்பதில்லை. சூழல் இப்படியிருக்க, தமிழகத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட அஜித், ரசிகர் மன்றங்களை கலைத்தது பேசு பொருளானது. உண்மையிலேயே இது பெரிய விஷயம்தான். ஆம்  ஓடாத படத்தை கூட வெற்றிப்படமாக்கும் சக்தி படைத்தவர்கள் ரசிகர்கள். ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கும் சில நடிகர்களுக்கு மத்தியில் அஜித்தின் இந்த செயல் சினிமா வட்டாரத்தையே வியக்க செய்தது. 

சால்ட், பெப்பர் ஹேர் ஸ்டைல்

நடிகன் என்றாலே பிட்டா, 60 வயதானாலும் இளைஞன் லுக்கில் காட்டுவதுதான் தமிழ் சினிமா ஸ்டைல் என்று நினைத்திருந்த நேரத்தில், தன்னுடைய நரைத்த முடிகளுக்கு டை அடிக்காமல், ஒரிஜினலாக நடித்து அசர வைத்தவர் அஜித் குமார். பின் அவரின் ரசிகர்களும் அவரை போன்றே சால்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை பாலோ செய்தனர். 

இப்படி தனக்கென தனி ரூட்டு, தனி ஸ்டைல்,  என பல எடுத்துக்காட்டுகளுடன் வாழும் அஜித் குமார் திரையில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹூரோ தான் என மகுடம் சூட்டுகின்றனர் அவரின் ரசிகர்கள்.  ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று தனக்கான தனி இடத்தை பிடித்து சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் குமாருக்கு ஏ.பி.பி நாடு சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகள்.”

Continues below advertisement
Sponsored Links by Taboola