ரிலீஸூக்கு முன்பே சம்பவம் செய்த குட் பேட் அக்லி...ஓவர்நைட்டில் 25 மில்லியன் வியூஸ் பெற்ற டீசர்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாக 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது

குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஒப்பந்தமான படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தைக் காட்டிலும் குட் பேட் அக்லி படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் அந்த படத்தில் அஜித்தின் தோற்றமும், அவரது கெட்டப்பும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழலில், குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரசிகர்கள் அஜித்தை தங்கள் பார்க்க விரும்பிய ஒரு கதையில் பார்ப்பார்கள் என்பதை இந்த டீசர் உறுதி செய்திருக்கிறது.
Just In




25 மில்லியன் பார்வையாளர்கள்
வாலி , தீனா , பில்லா , ரெட். , அமர்க்களம் என அஜித் நடித்த அத்தனை படங்களின் சாயலும் இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு பக்கம் மிரட்டும் லுக்கில் அஜித் இருக்க இன்னொரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரனின் கண்களை கவரும் செட் லொக்கேஷன் அவரது ஸ்டைல் கதை சொல்லல் , ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை திரையரங்குகள் திருவிழாக்கோலமாக மாற அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் உள்ளது. ரஜினிக்கு பேட்ட படம் அமைந்தது போல் விஜய்க்கு மாஸ்டர் படம் அமைந்தது போல் அஜித் என்கிற ஸ்டாரை கொண்டாடும் வகையில் இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
விடாமுயற்சி படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் இந்த மாதிரியான ஒரு ஃபேன்பாய் சம்பவத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தார்கள். நேற்று வெளியானது முதல் குட் பேட் அக்லி படத்தின் டீசர் சமூக வலைதளம் எங்கு ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. யூடியூபில் மட்டும் இந்த டீசர் 24 மணி நேரத்திற்குள்ளாக 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.