2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது ,  பல பிரபலங்கள் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக  அதிகாலையில் வாக்களிக்க முன்வந்தனர்.




அப்படியிருந்தும், அஜித், விஜய், சியான் விக்ரம், சூரியா, கார்த்தி போன்ற நடிகர்களைப் பார்க்க ஏராளமானோர் கூடியிருந்தனர்.




பல நட்சத்திரங்கள் பொறுமையாக மற்ற வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்கும் முறைக்காக காத்திருந்தனர்.வாக்களித்த பின்பு தங்களின் மையிட்ட விரலை காட்டி  புகைப்படம் எடுத்து கொண்டனர் . அதே நேரத்தில் சில ரசிகர்கள் இந்த வாய்ப்பை தவறாகப் பயன்படுத்தி, அவர்களின் அனுமதியின்றி அவர்களுடன் செல்பி எடுக்க முயன்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம்  தல அஜித்தை எரிச்சலூட்டியது.




அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவன்மியூர் வாக்குச் சாவடிக்கு வந்து இருந்தார் , தன்னுடைய அனுமதி இன்றி ரசிகர் ஒருவர் செல்பி எடுத்ததை பார்த்து கோபம் அடைந்த அஜித் அவரின் செல்போனை பறித்தார்.தந்து வாக்கினை செலுத்திய பின்பு அந்த ரசிகரை அழைத்து , "வாக்கு மய்யத்தில் செல்பி எடுப்பது தவறு இது போன்று செய்யாதீர்கள் , ஓட்டு போட்டிங்களா இல்லனா முதலில் அதை செய்யுங்கள் , மாஸ்க் போடுங்கள் " என்று கூறி அவரின் செல்போனை திருப்பி குடுத்தார் .பிறகு வாக்கு மையத்தில் இருந்து இறங்கி வந்து அனைவரிடம் தனது மன்னிப்பை கேட்டார் . பரவ இல்லா தல என்று ரசிகர்கள் கூறினார்கள் .


தல எப்போதும் டக்கர் டோய் !!!!!